பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/519

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி

517


“ஓ! இதென்ன கையில்?- என் மேல் நம்பிக்கையேயில்லை என்று மகாராணியிடம் கொடுப்பதற்காகக் கூடி எழுதிக் கொண்டு வந்த ஒப்புரவு மொழிமாறா ஒலையா?” என்று கேட்டுக்கொண்டே உரிமையோடு மிகவும் சுவாதீனமாக வானவன்மாதேவியின் கையிலிருந்து அந்த ஒலையை வாங்கினார் மகாமண்டலேசுவரர். அதை அவர் வாங்கிப் படிக்க நேர்ந்தால் அவருடைய மனம் புண்படும் என்பதனால் அவரிடம் கொடுக்கக் கூடாதென்று நினைத்திருந்த மகாராணி மகாமண்டலேசுவரர் கேட்டபோது மறுக்க முடியாமல் கொடுத்துவிட்டார். с

தன்மேல் நம்பிக்கையில்லை என்று கூற்றத்தலைவர்கள் கூடி நிறைவேற்றியிருந்த அந்த ஒப்புரவு மொழிமாறா ஒலையைப் படித்து முடித்ததும் புன்னகை செய்துகொண்டே தலைநிமி ர்ந்தார் மகாமண்டலேசுவரர். ஒரே விதமான வார்த்தைக்குப் பல பொருள்கள் கிடைக்கும் சிலைடைப் பாட்டைப் போல் அவருடைய அந்த ஒரு புன்னகைக்குப் பல பொருள்கள் உண்டு. புன்னகை தவழும் முகத்துடனேயே பேசினார் அவர்:

“ஐயா, கழற்கால் மாறனாரே! இப்படி, இங்கே என்

முகத்தைக் கொஞ்சம் நிமிர்ந்து பார்த்து நான் சொல்வதைக் கேளுங்கள். இதோ இந்த இடத்துக்குள் நான் நுழையுமுன் என் கால்களில் அணிந்திருந்த பாதக் குறடுகளை (மரச் செருப்புகள்) எப்படிக் கழற்றி எறிந்துவிட்டுச் சுலபமாகக் காலை வீசிக்கொண்டு நடந்து வந்திருக்கிறேனோ, அவ்வளவு இலோசாகப் பதவியையும் என்னால் கழற்றி எறிந்துவிட் முடியும்.”

“எறிந்துவிட முடியுமானால் நீங்கள் இதற்குள் கழற்றி எறிந்திருக்க வேண்டுமே? ஏன் அப்படிச் செய்யவில்லையோ?” துணிவை வரவழைத்துக் கொண்டு எதிர்த்துக் கேட்டுவிட்டார் கழற்கால் மாறனார். -

“நல்ல கேள்வி கேட்டீர்கள், கழற்கால் மாறனாரே! உங்களைப்போல் தமிழவேள் பாண்டிய மூவேந்த வேளார். பட்டம் பெற்ற ஒருவரால்தான் இந்தக் கேள்வி என்னிடம்