பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/521

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி

519


எனக்கு அளிக்கப்பட்ட தென்னவன் தமிழவேள் பாண்டிய மூவேந்த வேளான்’ என்ற பட்டத்தையும் அதற்கு அறிகுறியாக என் விரலில் அணிவிக்கப்பட்ட ஏனாதி மோதிரத்தையும் இப்போதே கழற்றி எறியப் போகிறேன் நான் கொதிப்போடு கத்தினார் கழற்கால் மாறனார்.

“தாராளமாகக் கழற்றி எறியுங்கள், அவைகளை நீங்கள் கழற்றி எறிந்துவிட்டால், உங்களைச் சார்ந்திருந்த காரணத்தால் அந்தப் பட்டத்துக்கும் மோதிரத்துக்கும் ஏற்பட்டிருந்த களங்கமாவது நீங்கும். ஒரு காலத்தில் தென்பாண்டி நாட்டிலேயே சிறந்த வீரர்களுக்கு அளிக்கப்பட்ட ஏனாதி மோதிரம் என்ற மரியாதைப் பரிசு இப்போது உங்களைப்போல் ஒரு பதவி ஆசை பிடித்த கிழட்டு மனிதரின் கைவிரலில் கிடப்பதை யாருமே விரும்பமாட்டார்கள்” என்று மகாமண்டலேசுவரர் சொல்லி முடிப்பதற்குள் அவருடைய காலடியில் ‘ணங் கென்று அந்த மோதிரம் கழற்றி விசி ஏறியப்பட்டு வந்து விழுந்தது. கழற்றி வீசி எறிந்தவர் கழற்கால் மாறனார். - - -

மகாமண்டலேசுவரர் கீழே குனிந்து அந்த மோதிரத்தைக் கையில் எடுத்துக்கொண்டு நிமிர்ந்தபோது கழற்கால் மாறனார் கோபத்தோடு வேகமாக அந்த இடத்திலிருந்து வெளியேறிப் போய்க்கொண்டிருந்தார். -

“பாவம்! முதிர்ந்த வயதில் முதிராத மனத்தோடு பதவி ஆசைக்கு ஆளாகி என்னென்னவோ பேசுகிறார்” என மகாமண்டலேசுவரரை நோக்கிக் கூறினார் மகாராணி,

“ஆமாம்! வீடு போபோ என்கிறது. காடு வா வா என்கிறது.

இந்த வயதில் இப்படிக் கேட்பார் பேச்சைக் கேட்டுக் கொண்டு கெட்டலைய வேண்டாம் இவர்! மகாராணி! இந்த ஒலையும் இந்த மோதிரமும் என்னிடமே இருக்கட்டும். நான் உங்களை அப்புறம் வந்து பார்க்கிறேன்” என்று கூறிவிட்டு அவர் அங்கிருந்து புறப்பட்டபோது, “நீங்கள் இந்தச் சிறுபான்மையாளர்களின் செயலை மனத்தில் வைத்துக் கொண்டு புண்படக்கூடாது” என்று உபசாரமாகச் சொன்னார் மகாராணி. -