பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/535

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி

533


கடப்பதற்கே எனக்குப் பயமாக இருக்கும். தண்ணிரை மொத்தமாகப் பரப்பாகப் பார்க்கும்போது அவ்வளவு தூரம் பயப்படுவேன் நான். இதோ இந்தப் பெண் கொஞ்சங்கூடப் பயப்படாமல், இவ்வளவு பெரிய கடலில் சிறிய தோணியைச் செலுத்திக்கொண்டு எவ்வளவு உரிமையோடு சிரித்துக் கொண்டே மிதந்து வருகிறாள் பார்த்தாயா? எனக்கு வியப்பாக இருக்கிறது!” என்று கப்பலின் தளத்தில் நின்ற பெண் தன் அருகில் இருந்த பெண் முகங்கொண்ட இளைஞனிடம் கூறினாள். தோணியிலிருந்த மதிவதனி அதைக் கேட்டுப் பலமாகச் சிரித்தாள்.

“பெண்னே! நீ ஏன் சிரிக்கிறாய்?” என்று அந்த இளைஞன் மதிவதனியைப் பார்த்துக் கேட்டான். அந்தக் குரல் அசல் பெண் குரல் போலிருப்பதை எண்ணி வியந்து கொண்டே, “ஒன்றுமில்லை; உங்கள் பக்கத்தில் நின்று கொண்டிருக்கும் அம்மையார் சற்று முன் உங்களிடம் கூறிய வார்த்தைகளைக் கேட்டேன். சிரிப்பு வந்தது. இவ்வளவு தூரம் தண்ணிருக்குப் பயப்படுகிறவர்கள் கப்பலில் வர எப்படித் துணிந்தார்களென்று எனக்குத் தெரியவில்லை!” என்று பதில் கூறினாள் மதிவதனி.

‘அதற்கென்ன செய்வது ? எது எதற்கெல்லாம் பயப்படுகிறோமோ, அதை வாழ்வில் செய்யாமலா இருந்து விடுகிறோம்? பயப்படுவது வேறு வாழ்க்கை வேறு!” என்று சொல்லி விட்டுச் சிரித்தான் இளைஞன், அந்த இளைஞனுடைய உதடுகள் பெண்ணினுடையவை போல் சிவப்பாகச் சிறிதாய், அழகாய் இருப்பதை மதிவதனி கவனித்தாள்.

அவர்களுடைய கப்பலுடனேயே தன் தோணியையும் செலுத்திக்கொண்டு கரைக்குத் திரும்பினாள் அவள். அந்தக் கப்பலில் வந்தவர்கள் யார் என்பதை நேயர்கள் இதற்குள் புரிந்துகொண்டிருப்பார்கள். விழிஞத்திலிருந்து புறப்பட்ட நாராயணன் சேந்தனும், குழல்வாய்மொழியும் அவர்களிடம் வம்பு செய்து அந்தக் கப்பலிலேயே தனக்கும் இடம்பிடித்துக் கொண்ட கூத்தன் என்னும் வாலிபனும்தான். இப்போது