பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/536

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

534

பாண்டிமாதேவி / இரண்டாம் பாகம்


செம்பவழத் தீவை நெருங்கிக் கொண்டிருந்தார்கள். கப்பலை நிறுத்திவிட்டுக் கரையில் இறங்கியதும், “பெண்ணே ! உன்னோடுகூட வந்தால் எங்களுக்கு இந்தத் தீவைச் சுற்றிக் காண்பிப்பாய் அல்லவா?” என்று மதிவதனியைப் பார்த்துக் கேட்டான் நாராயணன் சேந்தன். ‘ஆகட்டும்” என்று புன்னகையோடு பதில் சொன்னாள் மதிவதனி, கப்பலைக் கவனமாகப் பார்த்துக்கொள்ளுமாறு ஊழியர்களிடம் சொல்லி விட்டுச் சேந்தனும் குழல்வாய்மொழியும், கூத்தனும், மதிவதனியோடு ஊர் சுற்றிப் பார்க்கக் கிளம்பினார்கள்.

எல்லா இடங்களையும் சுற்றிக் காண்பித்துவிட்டு இறுதியாகத் தீவின் கடைவீதிக்கு அவர்களை அழைத்து வந்தாள் மதிவதனி, அணிகலன்களிலும், அலங்காரத்திலும் அதிகம் பிரியமுள்ளவளாகிய குழல்வாய்மொழி நவரத்தின நவமணிகளும் பொன்னும், புனைபொருள்களும் விற்கும் ஒரு பெரிய கடைக்குள் எல்லாரையும் அழைத்துக்கொண்டு ஆவலோடு நுழைந்தாள். செம்பவழத் தீவிலேயே பெரிய கடை அது.

சாத்ரூபம், கிளிச்சிறை, ஆடகம், சாம்பூநதம் என்னும் நால்வகைப் பொன்னும், வயிரம், மரகதம், மாணிக்கம், புருடராகம், வயிடுரியம், நீலம், கோமேதகம், பவழம், முத்து -என்னும் ஒன்பது வகை மணிகளும் நிறைந்திருந்தன. அங்கே. ஆடவர் அணிந்துகொள்ளும் தாழ்வடம், கண்டிகை, சுரி, பொற்பூ, கைக்காறை, திருப்பட்டிகை, குதம்பை, திருக்கம்பி, கற்காறை, சுருக்கின வீர பட்டம், திருக்கு தம்பைத் தகடு, திரள்மணி வடம் ஆகியவைகள் ஒருபுறம் இலங்கின. பெண்கள் அணிந்து கொள்ளும் திருக்கைக்காறை மோதிரம், பட்டைக்காறை, தாலி, திருக்கம்பி, திருமகுடம், வாளி, உழுத்து, சூடகம், திருமாலை, வாகுவலயம், திருக்கைப்பொட்டு பொன்னரிமாலை, மேகலை ஆகியவை மற்றொருபுறம் இலங்கின.

வயிரத்தின் பன்னிரு குற்றமும், ஐந்து குணமும் மரகதத்தின் எட்டுக் குற்றமும் எட்டு குணமும், மாணிக்கத்தின் பதினாறு குற்றமும் பன்னிரு குணமும், நீலத்தின் எட்டுக்