பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/578

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

576

பாண்டிமாதேவி / மூன்றாம் பாகம்


பெருமானே ! எங்களுக்கு ஒரு துன்பமும் நேராமல் காப்பாற்றுங்கள்” என்று மனத்தில் தியானம் செய்தவாறே குதிரையைச் செலுத்திக் கொண்டிருந்தார். காட்டில் அங்கங்கே பிரும்மாண்டமான புத்தர் சிலைகளையும், பெளத்த விஹாரங்களையும் கண்டபோதெல்லாம் திரும்பத் திரும்ப இந்த ஒரே தியானம்தான் ஈழ நாட்டுப் படைத்தலைவரின் மனத்தில் உண்டாயிற்று. -

காட்டில் ஒரிடத்தில் பெளத்த விஹாரத்தில் விளக்கேற்றிக் கொண்டிருந்த புத்த பிட்சு ஒருவர் விளக்கோடு ஓடி வந்து அவர்கள் குதிரைகளை வழிமறித்து நிறுத்தினார். விளக்கோடு பதறிப்போய் ஓடிவந்த அவரைக் கண்டு என்னவென்று அறிந்து கொள்ளும் ஆவலுடன் அவர்களும் குதிரைகளை நிறுத்தினார்கள். பெரியவரே ! நான் சொல்வதைக் கேளுங்கள். இந்த இருட்டில் பயணம் வேண்டாம். என்னோடு நீங்களும் இந்த இளைஞரும் இந்தப் பெளத்த விஹாரத்தில் தங்கிவிட்டு அதிகாலையில் போகலாம், நான்கூட அரசரின் வெள்ளணி விழாவைக் காண்பதற்காகக் காலையில் அனுராதபுரம் புறப்படலாமென்றிருக்கிறேன்” என்று சக்கசேனாபதியை நோக்கிச் சொன்னார், புத்த பிட்சு, சக்கசேனாபதி இராசசிம்மனின் முகத்தைத் திரும்பிப் பார்த்தார்.

“அடிகளே! உங்களுடைய அன்புக்கு நன்றி. பயத்தை நாங்கள் மறந்துவிட்டோம். எங்களுக்கு அவசரமாகப் போக வேண்டும். புதிய இடத்தில் இந்தக் காட்டுக் குளிரில் எங்களுக்கு உறக்கம் வரப்போவதில்லை. ஆகவே எங்களுக்கு விடைகொடுங்கள்” என்று இராசசிம்மனே முகத்திலடித்தாற் போல் மறுத்துப் பதில் சொல்லிவிட்டான். -

“உங்கள் விருப்பம் அதுவானால் சரி! மறுப்பதற்கு நான் யார்?” என்று வழியை விட்டு விலகி நின்று கொண்டார் புத்த பிட்சு. குதிரைகள் மீண்டும் ஓடின.

“இளவரசே! அந்தப் புத்த பிட்சு வலுவில் ஓடிவந்து கூறியதைக் கேட்டீர்களா? இந்தக் காடுகளைப் பற்றி விவரம்