பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/601

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 5.99


பார்த்தான் குழல்வாய்மொழி கூத்தனின் முகத்தைப் பார்த்தாள்; கூத்தன் கடலைப் பார்த்தான். இந்த மெளனம் கேள்வி கேட்டவர்களுக்கு எரிச்சலை மூட்டியது.


“இந்தா ஐயா! முன்குடுமிக்காரரே! உம்மைத்தான் கேட்கிறோம். பதில் சொல்லும்” என்று கடுமையான குரலில் மீண்டும் கேட்டார்கள் அவர்கள். சேந்தன் பதில் சொன்னான், “கப்பல் விழிஞத்திலிருந்து வருகிறது!”


“என்ன காரியமாக வருகிறதோ?” “சொந்தக் காரியமாக” “எங்களிடம் எதையும் மறைக்காமல் சொல்லிவிட வேண்டும், இல்லாவிட்டால் வருத்தப்பட நேரிடும்.” “மறைப்பதற்கு எங்களிடம் ஒன்றுமில்லை.” “அப்படியானால் நீங்கள் எல்லோரும் யார்? என்ன காரியமாக ஈழநாட்டுக்குப் புறப்பட்டீர்கள் என்பதையெல்லாம் உடனே கூறுங்கள்.” ‘. . . .


இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லாமல் மறுபடியும் குழல்வாய்மொழியின் முகத்தைப் பார்த்தான் சேந்தன். குழல்வாய்மொழி அந்த வீரர்களை நோக்கித் துணிவோடு கேட்டாள்; “நீங்கள் எங்களுடைய கப்பலைத் தடுத்து நிறுத்திக்கொண்டு எங்களை இவ்வாறு மிரட்டுவது அநாகரிமாக அல்லவா இருக்கிறது? நாங்கள் யாராயிருந்தால் என்ன? நாங்கள் என்ன காரியமாக ஈழநாட்டுக்கு வந்திருக்கிறோம் என்பதை உங்களிடம் சொல்லவேண்டிய அவசியமில்லை!”


அவள் சினத்தோடு படபடப்பாக எதிர்வாதம் புரிந்ததைக் கேட்டதும் வீரர்கள் இன்னும் ஆத்திரம் அடைந்தனர்.


“எங்கள்மேல் ஆத்திரப்பட்டுப் பயனில்லை, அம்மா! ஈழ மண்டலத்து மகாசேனாபதியின் உத்தரவுப்படி நாங்கள் இந்தக் கப்பலை இப்போது கைப்பற்றுகிறோம். எங்கள் கண்காணிப்பில் அப்படியே இந்தக் கப்பலைச் செலுத்திக்கொண்டு போய்த் தமனன் தோட்டத்துத் துறையில் நங்கூரம்பாய்ச்சி நிறுத்தி விடுவோம். எங்கள் மகாசேனாபதி வந்து பரிசோதித்து விசாரணை செய்கிறவரை யாரும் இந்தக் கப்பலிலிருந்து கீழே இறங்க விடமாட்டோம்” .