பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/606

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

604

பாண்டிமாதேவி / மூன்றாம் பாகம்


விட்டதற்காக நான் உனக்கு எவ்வளவோ நன்றி சொல்ல வேண்டியதிருக்க இப்படிக் கத்தியைக் காட்டிப் பயமுறுத்துகிறேனே என்று கோபிக்காதே. இப்போது செய்திருப்பது போல் உன் வாயை அடக்காமல் விட்டிருந்தால் இந்தச் சமயத்தில் வியப்பு மயமான உன் உள்ளத்து உணர்ச்சிகள் என்னை நோக்கி எவ்வாறு வார்த்தைகளாக வெளியேறுமோ? என்னென்ன கேள்விகள் என்னிடம் நீ கேட்பாயோ? எப்படி எப்படிச் சீறுவாயோ? அவற்றை அறிந்துகொள்ளும் ஆவல் எனக்கு இல்லை. நான் இப்போது இந்தக் கப்பலிலிருந்து அவசரமாகத் தப்பிச் செல்லப்போகிறேன். இதோ இந்தக் கீழ்த்தளத்திலிருந்து கயிற்றைக் கட்டிக்கொண்டு பின்புறமாகக் கடலில் இறங்கிச் சிறிது தூரம் நீந்திக் கரை சேர்ந்துவிடுவேன். அதற்குள் கூச்சல் போட்டு நீ என்னைக் காட்டிக் கொடுத்து விடலாமென்று நினைக்காதே! கூச்சல் போடவோ, நகரவோ முடியாமல் உன்னை இந்த அறையில் கட்டிப்போட்டு விட்டுத்தான் நான் புறப்படுவேன். ஒரு பெண் இன்னொரு பெண்ணிடம் இவ்வளவு கொடுமையாக நடந்து கொள்ள முடியுமா? என்று என்னைப் பற்றிக் கேவலமாக நினைக்காதே! சந்தர்ப்பம்தான் காரணம், அம்மா. வாயை அடைக்காமலும் கத்தியைக் காட்டாமலும் இருந்தால் நீயே எனக்குப் பயப்படமாட்டாய். அதனால்தான் நான் இப்படி நடந்து கொள்ள வேண்டியதாயிற்று.”

இவ்வாறு சொல்லிக்கொண்டு குழல்வாய்மொழியைப் படுக்கையில் தள்ளிக் கட்டிலோடு கட்டிலாகக் கயிற்றினால் கட்டி விட்டாள் பகவதி. குழல்வாய்மொழியின் மென்மையான கொடியுடல் வீர ரத்தம் ஒடும் தளபதியின் தங்கையை எதிர்த்துத் திமிறிக்கொண்டு போராட முடியவில்லை. ஆகவே கட்டுண்டாள்.

அவள் கண் காணவே அறைக்கதவைத் திறந்து கொண்டு கப்பலின் பின்புறத்து வழியே கயிறு கட்டி இறங்கிக் கடலில் பாய்ந்து விட்டாள் பகவதி. கயிற்றைப் பிடித்துக்கொண்டு இறங்குமுன் கடைசியாக நிமிர்ந்து பார்த்து, “இடையாற்று