பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/622

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

620

பாண்டிமாதேவி / மூன்றாம் பாகம்


நம் உயிர்களைக்கூடப் பொருட்படுத்திப் பயப்படாமல் எழுந்து உதவ ஓடிவந்தோம். தண்ணிர் உடைப்பு நம்மைத் தடுத்து விட்டதே. புத்திசாலிப் பெண்ணாயிருந்தால் பிட்சு கூப்பிட்ட போதே இக்கரைக்கு வந்திருக்கவேண்டும். பாவம், விதி முடிகிற சமயத்தில் அறிவுகூட நல்லது கெட்டதைப் பகுத்துணராமல் பிறழ்ந்துவிடுகிறதே! இல்லையானால் கள்ளங்கபடமறியாத இந்த அடிகளைப் பற்றி ஐயமுற்றுப் பயந்திருப்பாளா இவள்?’ என்று சக்கசேனாபதியும் சோகத்தோடு சொன்னார்.

ஆறுதல்களையும் மீறி இறந்து கிடக்கும் அந்தப் பெண்ணுடல் பகவதியினுடையதுதான் என்று குமார பாண்டியனின் மனம் உறுதியாக எண்ணியது. ஆனால் அதைத் திடப்படுத்திக்கொள்ள இன்னும் சரியான சான்று இருந்தால் சந்தேகம் தீர்ந்துவிடும். தளபதி வல்லாளதேவனின் தங்கையை நன்றாகப் பார்த்துப் பழக்கப்பட்டு அடையாளம் சொல்லக் கூடிய ஒருவர் இருந்தால் அவள்தானா என்பதை இப்போதே உறுதிப்படுத்திக்கொண்டு விடலாம். ஆனால் அவன் ஒருவனைத் தவிர அவளை அடையாளம் தெரிந்தவர்கள் யார் இருக்கிறார்கள் அங்கே?

இராசசிம்மன் மனத்தின் உணர்ச்சிப் பரப்பெல்லாம் சோகம் கவ்விட, மேலே என்ன நினைப்பதென்று தோன்றாமல் மயங்கி நின்றான். . - - -

“சக்கசேனாபதி! எனக்குத் தெரிந்த பெண்களுக்குள்ளே வல்லாளதேவனின் தங்கைக்கு ஒரு தனிக் குணம் உண்டு. பெண்ணின் அழகும், ஆணின் நெஞ்சு உரமும் கொண்டவள் பகவதி, ஒரு பெரிய வீரனின் தங்கை என்று சொல்வதற்கு ஏற்ற எல்லா இலட்சணங்களும் பகவதியிடம் உண்டு” என்று கண்களில் நீர் மல்க அவன் கூறினான். - -

“நீங்கள் மனத்தைத் தேற்றிக்கொள்ளுங்கள். இறந்து கிடப்பது அந்தப் பெண்ணாக இருக்க முடியாதென்றே எனக்குத் தோன்றுகிறது. நாம் இந்த விவரத்தைத் தமனன் தோட்டத்தில் விசாரித்து உறுதி செய்து கொள்ளலாம். இவள் பகவதியாயிருக்கும் பட்சத்தில் தமனன் தோட்டத்துறையில் வந்து இறங்கினால்தான் இந்தப் பாதையாகப் புறப்பட்டிருக்க