பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/639

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி

637


சந்தித்திருப்பாள். என் வாயில் துணியைத் திணித்து என்னைக் கட்டிப் போட்டுத் தப்பிப் போகும்போது அந்த நன்றி கெட்டவள் உங்களைச் சந்திப்பதற்குப் போவதாகத் தான் கூறினாள்” என்று சினம் பொங்கப் படபடப்போடு வார்த்தைகளை இறைத்தாள் மகாமண்டலேசுவரரின் பெண். -

“குமாரபாண்டியரே! தப்பிப்போன இளைஞனைப் பற்றி என்னிடம் தனியாகக் கேட்டீர்களல்லவா? அதை இப்போது தெரிந்துகொள்ளுங்கள். இந்த உடைகளில்தான் அந்த இரகசியம் இருக்கிறது” என்று சொல்லிவிட்டுச் சேந்தனும் சேர்ந்துகொண்டு சிரித்தான்.

“விளங்கும்படியாகத்தான் சொல்லுங்களேன்! நீங்கள் இரண்டு பேருமாக என் சிந்தனையைக் குழப்புகிறீர்களே? இந்த உடைகளை அணிந்திருந்தது யார்? இப்போது எங்கே?’ என்று கேட்டான் இராசசிம்மன்,

“வேறு யாராயிருக்க முடியும்? தீரச் செயல்களையும் முரட்டுக்காரியங்களையும் வீரர்களின் உடன்பிறந்தவர்களால் தானே செய்யமுடியும்? தென்பாண்டி நாட்டுத் தளபதி வல்லாளதேவனின் அருமைத் தங்கை பகவதிதான் இந்த

வேடத்தில் வந்து, இந்தக் கப்பலில் கூத்தன் என்று பெயர் பூண்டு

நடமாடினாள். கப்பல் ஈழ நாட்டுக் கடற்படை வீரர்களிடம் பிடிபட்டதும் வேடத்தைக் கலைத்துவிட்டுத் தப்பி விட்டாள். அந்த வேடத்தைக் கலைத்த இரகசியம் எங்கள் இருவருக்கும் தான் தெரியும்.” “ . .

இவ்வாறு சேந்தன் அப்போது சொல்லிக்கொண்டே வந்தபோது குமாரபாண்டியனின் வாயிலிருந்து சோகக்குரல் ஒன்று எழுந்து ஒலித்தது. பொறியற்ற பாவைபோல் சோர்ந்து கப்பலின் தளத்தில் வீழ்ந்து இரண்டு கைகளாலும் தலையைப் பிடித்துக் கொண்டான் அவன். சேந்தனும் குழல்வாய் மொழியும் இராசசிம்மனின் நிலையைக் கண்டு பதறிப் போனார்கள்.

“என்ன? அந்தப் பெண் உங்களையும் சந்தித்து ஏதாவது ஏமாற்றிவிட்டாளா? ஏன் இப்படிச் சோர்ந்துபோய்த் தலையில் கையை வைத்துக்கொண்டு உட்கார்ந்துவிட்டிர்கள்? அல்லது