பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/660

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

658

பாண்டிமாதேவி / மூன்றாம் பாகம்


கோட்டத்திலேயே தங்கிவிட்டான். பாவம்! அதைக் கண்டு எனக்கே பரிதாபமாக இருந்தது. இடையாற்று மங்கலத்திலிருந்து என்னுடைய காவல் வீரர்கள் சிலரை வரவழைத்து ஒத்தாசைக்கு வைத்துவிட்டு வந்திருக்கிறேன். இந்தச் சமயத்தில் நீயும் அங்கு போனால் உதவியாயிருக்கும். தளபதி எல்லா விவரமும் என்னிடம் சொன்னான். கப்பலில் அவன் தங்கை பகவதி வந்தால் அவளை நானே அங்கு அழைத்து வந்துவிடுவேன். படைத்தளத்தைச் சுற்றிக் காவ்ல் பலமாக இருக்கிறது. ஆனாலும் தளபதியைக் கவனித்துக் கொள்வதற்காக உன்னை மட்டும் உள்ளேவிடச் சொல்லி நான் அனுமதி ஒலை எழுதித் தருகிறேன். நீ உடனே புறப்படு’ . . .

இதைக் கேட்டதும் குழைக்காதனுக்கு உடம்பு விதிர் விதிர்த்துப் போய்விட்டது. மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய அறிவின் சிகரமென விளங்கிய மகாமண்டலேசுவரர் மட்டும் இந்தச் செய்தியைச் சொல்லியிராமல் வேறு யாரேனும் சொல்லி யிருந்தால் அவன் சிறிதும் நம்பியிருக்கமாட்டான். தென்பாண்டி நாட்டு வீரத் தளபதி வல்லாளதேவனுக்கா உடல் நலம் சரி யில்லை? எத்தனையோ போர்க்களங்களில் பெரும் படையுடன் சென்று பகைவர்களைப் புறம்கண்டு வெற்றி வாகை சூடிய வல்லாளதேவனுக்கா திடீரென்று உடல் நலக் குறைவு ஏற்பட்டது என்று பல் கேள்விகள் அவன் உள்ளத்தில் எழுந்து பெரும் ஐயத்தை உண்டாக்கியிருக்கும். மகாமண்டலேசுவரரின் வாய்ச் சொல்லாகவே வருகின்ற விஷயம் எதுவாயினும் அதை நம்பித்தானேயாகவேண்டும்? இந்த நல்ல சமயத்திலா தளபதிக்கு உடல் நலமில்லாது போகவேண்டும்? என்று மனம் கலங்கினான்

“இங்கே நின்றுகொண்டிரு. இன்னும் சிறிது நேரத்தில் ஒலையை எழுதிக்கொண்டு வந்துவிடுகிறேன்’ என்று சொல்லிவிட்டுப் போனார் மகாமண்டலேசுவரர். அவன் அங்கேயே இருந்தான். சிறிது நேரத்தில் உறையிட்டு அரக்குப் பொறி வைத்த ஒலையோடு வந்தார் அவர். அதை அவனிடம் கொடுத்துவிட்டு, “போய் வா! இந்த ஒலையைக் கொடுத்ததும் உன்னை உள்ளே அழைத்துப்போய் விட்டு விடுவார்கள்"