பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/700

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

698

பாண்டிமாதேவி / மூன்றாம் பாகம்


நீ மிகவும் நல்லவன்” என்று அவன் கேட்ட கேள்விக்குத் தொடர்பின்றிப் பதில் வந்தது அவரிடமிருந்து,

சிறிது நேரத்தில் இருவரும் நிலா முற்றத்திலிருந்து கீழே இறங்கி வந்தனர். “சேந்தா நீ போய் நந்தவனத்திலிருந்து எத்தனை வகை மலர்கள் இருக்கின்றனவோ அவ்வளவும் குடலை நிறைய கொய்துகொண்டு வா. நான் போய் நீராடி வருகிறேன்” என்று கூறிச் சேந்தனை நந்தவனத்திற்கு அனுப்பிவிட்டு பறளியாற்றை நோக்கி நடந்தார் மகாமண்டலேசுவரர். குழந்தைத்தனமாக வெகுநேரம் துளைந்து முங்கி முழுகி நீராடினார். ஈரம் புலராத ஆடையோடு இடையாற்றுமங்கலம் மாளிகையிலிருந்து சிவன் கோயில் வாயிலுக்கு வந்தார். சேந்தன் குடலை நிறையப் பல நிறப் பூக்களோடு எதிரே வந்து நின்றான். அவற்றை வாங்கிக்கொண்டு ஆலயத்துக்குள் சென்றவர் வெகுநேரமாக வெளியே வரவில்லை. மேலாடையை அரையில் பயபக்தியோடு கட்டிக்கொண்டு கோவிலுக்குள் நுழைந்து எட்டிப்பார்த்தான் சேந்தன். அங்கே கண்ட காட்சி அவனை மெய்சிலிர்க்க வைத்தது. சிவலிங்கத்திற்கு முன்னால் மகாமண்டலேசுவரர் தியானத்தில் அமர்ந்திருந்தார். சற்றே மூடிக் குவிந்திருந்த அவருடைய விழிப்பள்ளங்களிலிருந்து மாலை மாலையாகக் கண்ணிர் வடிந்து கொண்டிருந்தது. தம் சிரத்தை அலங்கரித்துக் கொண்டிருந்த முடியைக் கழற்றி மலர்களோடு சிவலிங்கத்தின் பீடத்தில் இட்டிருந்தார் அவர். சேந்தன் அதைக் கண்டு மெய்யும், மனமும் குழைத்து உரோம புளகமெய்தி, கண்ணிரரும்ப நின்றான். எவ்வளவு நேரம் அப்படியே நின்றானோ அவன்? தன்னை மறந்து நின்று கொண்டே இருந்தான். -

மிகாமண்டலேசுவரர் தியானங் கலைந்து எழுந்து நின்றார். அப்போதுதான் மலர்ந்த செந்தாமரைப் பூப்போல் அவருடைய முகத்தில் தெய்வீகமானதொரு ஒளி மலர்ந்து இலங்கியது. அந்த ஒளியின் மலர்ச்சியில் அறிவின் அலங்காரம் எரிந்து சாம்பலாகி விட்டதுபோல் திருநீறு துலங்கியது நெற்றியில்,

“சேந்தா! மகாமண்டலேசுவரரை, அதோ அந்த இடத்தில் கழற்றி வைத்துவிட்டேன். இனி என் தலையில் “யாரும் கல்லெறிய மாட்டார்கள்” என்று சிவலிங்கத்தின் பீடத்தை