பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/704

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

702

பாண்டிமாதேவி / மூன்றாம் பாகம்


சத்தியம் செய்துகொடு. இந்த நாட்டு மகாராணிக்கும் குமாரபாண்டியனுக்கும்கூட நான் இவ்வளவு நன்றிக் கடன்படவில்லை. ஆனால் உனக்குக் கடன் பட்டிருக்கிறேன் சேந்தா!” அவர் கூறியதைக் கேட்டுச் சேந்தன் தயங்கினான். அவர் சிரித்துக்கொண்டே மேலும் கூறினார். “பார்த்தாயா? எனது நல்வினைப் பயன் தீர்கிற காலத்தில் நீ கூட நான் சொல்கிறபடி கேட்கமாட்டேனென்கிறாயே!”

‘ஐயா, சுவாமி அந்தக் குற்றத்தை என் மேல் சுமத்தாதீர்கள். நான் நீங்கள் கொடுப்பதை ஏற்றுக் கொள்கிறேன். நீங்கள் சொல்கிறபடியே கேட்கிறேன். இது சத்தியம்! இது நிச்சயம்!” என்று கைகூப்பிச் சொன்னான் சேந்தன்.

‘சிவன்கோவில் குறட்டில் உட்கார்ந்து என்னை வணங்கிக்கொண்டே நீ சொல்லும் இந்த வார்த்தைகள் உறுதி தானே? எந்தக் காரணத்துக்காகவும் நீ கொடுத்த சத்தியத்தை மாற்ற மாட்டாயே?”

“என்மேல் இன்னும் சந்தேகமா சுவாமி’ என்று கூறிய அவனை விளக்கருகே கூட்டிக் கொண்டுபோய், அவன் முகத்தை உற்றுப் பார்த்தார். அவர். சில விநாடிகள் அப்படியே பார்த்துக்கொண்டு நின்றவர், “சேந்தா! உன் சத்தியத்தை நம்புகிறேன்” என்று தீர்மானமான குரலில் சொன்னார்.

“என் பாக்கியம்” என்றான் சேந்தன். ‘இப்போது கேட்டுக்கொள்! அதிர்ச்சியோ கூச்சமோ அடையாதே, நான் பட்ட நன்றிக் கடனைத் தீர்த்துக் கொள்வதற்காக என் பெண் குழல்வாய்மொழியை உனக்குக் கொடுக்கப்போகிறேன்!”

“சுவாமி! அபசாரம். என்ன வார்த்தை கூறினர்கள்? மகாமண்டலேசுவரரின் செல்வப்புதல்வி எங்கே? இந்த அடிமை ஊழியன் எங்கே? நான் அதற்குத் தகுதியற்றவன். குரூபி. மேலும் தங்கள் அருமைக் குமாரி அல்லும் பகலும் குமாரபாண்டியனின் நினைவிலேயே ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள்’ என்று அலறிக்கொண்டே, நெடுஞ்சாண்கிடையாக அவர் பாதங்களில் வீழ்ந்து பற்றிக்கொண்டான் நாராயணன் சேந்தன்.

“அவள் குமாரபாண்டியனைக் காதலிப்பதை நான் அறிவேன். ஆயினும் என் விருப்பம் அவளை நீ ஏற்கவேண்டும்