பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/727

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி

725


“அதைத் தவிர வேறு வழியில்லை, இளவரசே! நீங்கள் தளபதியைச் சந்தித்து அழைத்துவரப் போகாவிட்டால் முடிவு அதைவிட விரைவிலேயே நாம் தோற்றுவிடுவோம்.”

“இந்த வார்த்தையைச் சொல்லத்தான் இவ்வளவு படைகளோடு கடல் கடந்து வந்தீர்களோ? நீங்கள் எனக்கு அளிக்கும் நம்பிக்கை இதுதானா?”

“உங்கள் நாட்டின் உட்பகைக் குழப்பங்களுக்கு நான் என்ன செய்ய முடியும்? புறப்பட்டுப்போய் உட்பகைக் கலகங்களைத் தவிர்த்து ஒற்றுமையை ஏற்பாடு செய்ய முயன்று பாருங்கள். ஏற்பாடு முடிந்தால் மூன்றாம் நாள் காலை பதினோரு நாழிகைவரை என்னால் முடிந்த மட்டும் இந்தப் போர்க்களத்தைச் சமாளிக்கின்றேன். அதற்குள் வர இயலாமற்போனால் பின்பு நீங்கள் இங்கு வரவே வேண்டாம். நானும் என்னோடு வந்த வீரர்களில் உயிர் பிழைத்தவர்களும் தப்பியோடிக் கப்பலேறிவிடுவோம்!”

“நீங்கள் இப்படிச் சொல்வதற்கு என்ன அர்த்தம்?” “அந்த அர்த்தத்தை வெளிப்படையாக வேறு சொல்ல வேண்டுமா? உங்களுக்குப் புரியவில்லையா?”

“புரிகிறதே! தோற்றுவிடுவேன் என்கிறீர்கள்.” “அதை ஏன் என் வாயாற் சொல்ல வேண்டும்? ஒரு வேளை நீங்கள் சமாதானப்பட்டுத் தளபதி வல்லாளதேவனை அழைத்துவந்தால் நமக்கே வெற்றியாக முடியலாம்!”

“சக்கசேனாபதி அப்படியானால் மூன்றாம் நாள் காலை பதினொரு நாழிகை வரை இந்தப் போர்க்களத்தில் தோல்வி நிழல் நம் பக்கம் படர விடாமலிருக்கும்படிப் பார்த்துக் கொள்ளும் பொறுப்பை நீங்கள் ஏற்கிறீர்களா?”

“ஆகா! உறுதியாக ஏற்றுக்கொள்கிறேன்.” “நான் உங்களை நம்பிப் போய்விட்டு வரலாமா?” “தாரளமாகப் போய்வரலாம்!” “யாரங்கே! என்னுடைய பிரயாணத்துக்குக் குதிரை கொண்டு வா!’ என்று குமாரபாண்டியன் பாசறைக் குள்ளிலிருந்து தன் ஏவலனைக் கூவிக் கட்டளையிட்டான்.