பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/736

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

734

பாண்டிமாதேவி / மூன்றாம் பாகம்


கொலையச்சம் பரவியதுபோல் தோற்றமளித்ததை எல்லோரும் கண்டனர். இருவரும் ஓயாமல் அழுதிருந்த சாயல் தெரிந்தது. “தாயே! எங்களைக் கொல்ல ஓடிவருகிறார்கள். நீங்கள் தான் அடைக்கலம் அளித்துக் காப்பாற்றவேண்டும்” என்று மகாராணியிடம் முறையிட்டுக் கதறினார்கள், குழல்வாய்மொழியும் சேந்தனும் எல்லோருக்கும் அவர்கள் நிலை ஒருவாறு புரிந்துவிட்டது.

உடனே குமாரபாண்டியன் வாயிற்புறம் பார்த்தான். கலகக் கூட்டம் வரம்பு மீறிக் காவலைக் கடந்து உள்ளே நுழைய முயன்று கொண்டிருந்தது. -

“காவலர்களே! பராந்தகப் பெருவாயிலை மூடிவிட்டு உட்புறம் கணைய மரங்களை முட்டுக்கொடுங்கள். கோட்டைக்குள் யாரும் நுழையவிடாதீர்கள்” என்று சிங்க முழக்கம் போன்ற குரலில் கட்டளையிட்டான் இராசசிம்மன். அடுத்த விநாடி ஒன்றரைப் பனை உயரமும் முக்காற்பனை -அகலமும் உள்ள அந்தப் பிரம்மாண்டமான கதவுகள் மூடப்படும் ஒலி அரண்மனையையே அதிரச் செய்துகொண்டு எழுந்தது. . - - -

“குழல்வாய்மொழி! எங்களையெல்லாம் தவிக்கவிட்டுப் போய் விட்டாரே அம்மா உன் தந்தை அவர் இருந்த பெருமைக்கு இப்படியெல்லாம் ஆகுமென்று யாராவது எதிர் பார்த்தோமா!” என்று தணிக்கமுடியாமல் கிளர்ந்தெழும் துக்கத்தோடு அந்தப் பெண்ணைத் தழுவிக்கொண்டு கதறினார் மகாராணி. குழல்வாய்மொழி குமுறிக் குமுறி அழுதாள்.

“தேவி! அவருடைய காலம் முடிந்துவிட்டது. எங்களைத் தப்பிவாழச்செய்துவிட்டு அவர் போய்விட்டார். இரவோடு இரவாக இடையாற்று மங்கலத்திலிருந்து நாங்கள் இருவரும் முன்சிறைக்குப் போய்விட்டு இப்போது ஒரு முக்கிய காரியமாக வந்தோம். யாருக்கும் தெரியாமல் மூடு பல்லக்கில் வந்தோம். அரண்மனைக்கு அருகில் வந்தபோது இந்தக் கலகக்காரர்கள் எப்படியோ தெரிந்துகொண்டு துரத்தத் தொடங்கி விட்டார்கள். நல்ல வேளையாகக் காப்பாற்றி அபயமளித்தீர்கள். தம்முடைய அந்திம நேரத்தில் மகாமண்டலேசுவரர் தங்களிடம்