பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

84

பாண்டிமாதேவி / முதல் பாகம்


தங்கி விட்டுக் காலையில் போகலாம். மகாசபைக் கூட்டத்துக்காக நானும் அரண்மனைக்கு வரவேண்டி யிருக்கிறது. நாம் இருவரும் சேர்ந்தே போகலாம். மற்ற கூற்றத் தலைவர்களையெல்லாம் நேரே அரண்மனைக்குப் புறப்பட்டு வரும்படிதானே சொல்லி அனுப்பியிருக்கிறாய்?”

“ஆம் அவர்கள் யாவரும் நாளைக் காலையில் நேரே அரண்மனைக்குத்தான் புறப்பட்டு வருவார்கள்.”

“நல்லது! இப்போது உன்னிடம் ஒரு முக்கியமான வேண்டுகோள் விடுக்கப்போகிறேன். இந்த வேண்டுகோள் என்னுடைய சொந்த நன்மைக்காக மட்டும் அல்ல, எத்தனையோ வகையில் இந்தத் தேசத்தின் நன்மைகள் இந்த வேண்டுகோளுக்குள்ளே பொதிந்திருக்கலாம். அவற்றை யெல்லாம் விளக்கவோ விவரித்துச் சொல்லவோ இது நேர மில்லை” என்றார் நம்பி.

“மகாமண்டலேசுவரரின் பலமான அடிப்படையைப் பார்த்தால் அது எத்தகைய வேண்டுகோளாக இருக்குமோ என்று அடியேனுக்கு உண்மையிலேயே பயமாகத்தான் இருக்கிறது” என்று தளபதி இடைமறித்துக் கூறினார்.

“பயப்படுவதற்கு இதில் அப்படி ஒன்றும் இல்லை. இந்த ஒலையை இப்போது நான் உன்னிடம் திருப்பிக் கொடுக்கப் போவதில்லை. நான் பத்திரப்படுத் தி வைத்துக் கொள்வேனோ என்று நினைக்கிறாய் அல்லவா? அப்படியும் செய்யப் போவதில்லை. பின் என்ன செய்யப் போகிறேன், தெரியுமா? இதோ நீயே பார்த்துத் தெரிந்துகொள்” என்று சொல் லிவிட்டுப் பக்கத்தில் நின்று கொண்டிருந்த நாராயணன் சேந்தனைச் சமிக்ஞை செய்து கூப்பிட்டு ஏதோ மெல்லக் கூறினார்.

அவன் உடனே அந்த அறைக்குள்ளே எரிந்து கொண்டிருந்த தீபங்களில் ஒன்றை எடுத்துவந்து அவருக்கு முன்னால் ஏந்திப்பிடித்துக் கொண்டு நின்றான். தளபதி வல்லாளதேவனுக்குப் பகீரென்றது. “ஐயோ! இதென்ன காரியம் செய்கிறீர்கள்?’ என்று மகாமண்டலேசுவரரின் கையைப் பிடித்துத் தடுக்க எழுந்தான் அவன்.