பக்கம்:பாண்டியன் பரிசு-ஒரு மதிப்பீடு.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மேலும், அன்னத்துக்குரிய'பாண்டியன் பரிசை எவ்வகையிலேனும் கவர்த்திடவும், அதனால் அன்னத்தின் உரிமையைப் பறித்திடவும், திட்டமிட்ட சூழ்ச்சியில் இறங்கிய அவள் மாமன், அரசைக் கைப்பற்றி முடிசூடும் தனது நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்ள, கைக்கொள்ளும் ஒரு தந்திரமாகத்தன் மகனுக்கே அன்னத்தை மணம் செய்யவும் தயாராக இருந்ததை அறிந்திருந்த அன்னம், பாண்டியன் பரிசினை மீட்டுத்தந்த தன் காதலனின் தந்தையைக் குறித்து நன்றியுணர்வுக்கு ஆட்பட்டவளாவதன்றி மாறுபட எண்ணவும் இடமில்லாமற் போவதும் கருதலாகும். புரட்சிக் கவிஞரின் பகுத்தறிவுக் கொள்கை விளக்கம் செய்வதற்கு பூதம் புதையல் காக்கிறது எனக் கற்பிக்கப்பட்டதன் பொய்மை பலபல திகழ்ச்சிகளாலும், கதைமாந்தர் வாய்மொழியாலும் விளக்கப்படுகிறது. அப்படிப்பட்ட சுவையான சிறுகாவியத்தின் சிறப்பினை விவரிக்கப்புகும் ஆய்வாளர், புரட்சிக் கவிஞரின் குறுங்காப்பிய வடிவ படைப்புக்களைக் குறித்தும் விவரித்து அவற்றினால் உணர்த்தப்படும் கொள்கைகளையும் வரைந்துள்ளார்."புரட்சிக்கவி என்னும் தலைப்புடைய கவிதையில், மன்னன் மகளைக் காதலிக்கும் சூழ்நிலைக்கு ஆளான தமிழ்க்கவிஞன் உதாரன் - தனக்கும் தன் காதலிக்கும் முறையற்ற மரண தண்டனை மன்னரால் விதிக்கப்பட்டு கொலை மேடையில் நிறுத்தப்பட்டபோதும், தன் காதலிக்குற்ற தண்டனைக்கே கழிவிரக்கம் கொள்வதும், அதனினும் மேலாக, தான் தமிழ் கற்பிக்கச் சென்றவனாதலின், தன் உயிர் பறிக்கப்படுமாயின், அதனால் "அமுதென்று சொல்லுமித்தத் தமிழ், என்னாவி அழிவதற்குக் காரணமாயிருந்த தென்று சமுதாயம் நினைத்திடுமோ? ஐயகோ! என் தாய்மொழிக்குப் பழிவந்தால் சகிப்பதுண்டோ!" என்று கேட்பதுமாக அமைந்த அடிகள் புரட்சிக் கவிஞரின் உள்ளப் பிழிவாதல் உண்மை.இந்த உதாரனை நம் கண்முன்நிறுத்தும் கவிதையின் தலைப்பான புரட்சிக்கவி என்பதே பாரதிதாசனாரின் சிறப்புப் பெயராக வழங்கலாயிற்று. - viii