பக்கம்:பாண்டியன் பரிசு-ஒரு மதிப்பீடு.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துணைக்காவிய மாந்தர்கள்-81 என்று கூறி, “நீ கதிரை நாட்டை ஆள்க’ என்று ஆணையிடுவதாலும் எளிதாக எதனையும் நம்பும் இயல்பு உறுதிப்படுகின்றது. உண்மையை அறிந்ததும் நரிக்கண்ணனை வரவழைத்து அவன்மீது சீறுகின்றான். “இகழ்ச்சிமுடி பூண்டவனே, என்செய்தாய்நீ: இந்நாட்டு மன்னவனைப் பின்னி ருந்து நகைபுரியக் கொலைசெய்தாய்; அடடேநாட்டின் நங்கையினைத் தங்கையென்றும் பாராய்; கொன்றாய்!” என்று குற்றப் பத்திரிக்கை வாசிக்கின்றான். அன்னத்தையும் ஆத்தாளையும் தீர்த்துக் கட்டநினைப்பதாகவும், பாண்டியன் பரிசைத் திருடி விட்டதாகவும் குற்றம் சாட்டுகின்றான். அன்னத்தை அழைத்து நாட்டின் பொறுப்பை ஏற்றுக் கொள்ளுமாறு கேட்க, அவள், என்பாண்டி யன்பரிசை எனக்க ளிப்போன் எவனெனினும் அவனுக்கே உரியோள் ஆவேன் அன்பாண்டா ரே,இதுஎன் உறுதி யாகும் அருள்புரிய வேண்டுமென்றாள்" என்று பதிலுரைக்க, அரசனும் அதனை ஒப்புக்கொள்கின்றான். ... நீ, சாற்றுமொழி ஒவ்வொன்றும் நோக்கும்போது நூற்றுக்கொன்றேஅன்றோ மானே! உன்றன் நுண்ணறிவால் நீயுரைத்த வாறு நானும் ஏற்றுக்கொண்டேன்; அதுபோல் ஆகட்டும்" என்கின்றான். அன்னத்தின் கருத்தை முரசறைவிக்கின்றான். பேழை கிடைப்பது உறுதியாகத் தெரியாததால், அவனது நல்லமைச்சன்,"பேழையைக் காண்பது உறுதியில்லை; நாம் எத்தனைப் 39. இயல் - 39:1- பக். 65 40. இயல் -41:1- பக். 68 41. இயல்- 41:2- பக். 68