பக்கம்:பாண்டியன் பரிசு-ஒரு மதிப்பீடு.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 சுரகவின் பாண்டியன் பரிசு-ஒரு மதிப்பீடு பெருநாட்கள் இங்குக் கழிப்பது? ஏழெட்டு நாட்களுக்குள் பேழை கிடைக்காவிடில் மாழை என்னும் அரசன் மருகர்க்கு ஆட்சிதனை வழங்குவதே ஒழுங்காகும்' என்று கூற அதனையும் ஒப்புக் கொண்டு பறையறைவிக்கச் செய்கின்றான். காவியத்தின் முடிவில் இவன் "அன்னம் - வேலன்" திருமணத்தை அறிவிக்கின்றான். வேலன் அன்னத்திற்குத் திருமுடியும் சூட்டுகின்றான். "இதன் பின்னர் வேழமன்னனுக்குக் காவியத்தில் இடமில்லாமல் போகின்றது”. பேழையின் அடையாளத்தை அன்னம் கூறியதும் படையுடன் பேழையினைத் தேட ஆளியை அனுப்புகின்றான் அமைச்சன் யோசனைப்படி அப்போது, "திருநாட்டை வென்றேன்நான் எனினும் அந்த நாடுதனை உடையவர்க்கே நான வித்து நாளடைவில் அவ்விடத்தில் கப்பம் கொள்ளல் பீடுடைய அறமாகும்" என்று சொன்னதை நினைவுகூர்ந்தால் இவன் ஆட்சியின்கீழ் “வேலன்-அன்னம்” இவர்களின் ஆட்சி சிற்றரசாகத் திகழ்ந்தது என்பதை ஊகிக்க முடிகின்றது. (2) கதிரை வேலன் இவன் கதிர் நாட்டரசன். செங்கோலன். அன்னத்தின் தந்தை, கதிர் நாட்டரசி கண்ணுக்கிணியாளின் காதற்கணவன். இக்காவியத்தில் இவன்பெறும் பங்கு மிகச் சிறியது. சதிராடு கூடத்தில் சில பேசி வேழநாட்டரசனுடன் நடைபெற்ற போரில் மாய்ந்து விடுகின்றான். வேழநாட்டான் முழுப் படையையும் எழுப்பி வருகின்றான். கதிர்நாட்டுப்படை மறவர் கொதித்தெழுகின்றனர். அப்போது சதிராடு கூடத்தில் இருந்த அரசன் அரசமாதேவி கண்ணுக்கிணியாளிடம் அறப்போருக்கு மாறாக முன்னறிவிப்பு இல்லாமல் மின்னாது இடித்ததுபோல் வந்ததைக் குறித்துக் குறை கூறுகின்றான். "நம் படைகள் ஆயத்தமாக இல்லாது இருக்கும் நிலையில் உன் அண்ணன் நம்மை எதிர்த்தான். இந்நாட்டை உன் 42. இயல் - 77; 4-பக். 147 43. இயல் - 34:1-பக்.57