பக்கம்:பாண்டியன் பரிசு-ஒரு மதிப்பீடு.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துணைக்காவிய மாந்தர்கள்-Y_83 அண்ணன் பெற நினைத்தான். நின் உடன்பிறந்தான் என் பெரும் பகைவன். இவ்வுலகில் நீ என் உயிர்! என் வெற்றியில் நின்துன்பம் உளது” என்று கூறுகின்றான். மேலும், “மன்னவன்தான்! எணைநம்பி வாழுகின்ற மக்கட்கோ என்கடமை ஆற்ற வேண்டும்" என்று தன் நாட்டுக்காக வருந்துகின்றான். இருபடைகட்கும் கடும்போர் நடைபெறுகின்றது. கதிரை வேலன் போரில் இறங்குகின்றான்; தனிப்படுத்தப்படுகின்றான். கோட்டைக்குள்ளே இருவேந்தர் தனியிடத்தில் போர்புரிகின்றனர். கரிய ஆடை மேற்போர்த்து முகமூடி அணிந்திருந்த நரிக்கண்ணன் தன் மைத்துனன் முதுகில் ஈட்டியைப் பாய்ச்சிக் கொன்றொழிக் கின்றான். இத்துடன் இவன் பங்கு முடிகின்றது. (3) கண்ணுக்கினியாள். இவள் கதிர் நாட்டரசி. கதிரைவேல் மன்னனின் அரசமாதேவி. அரசனும் அவன் தேவியும் சதிராடு கூடத்தில் உரையாடிக்கொண்டிருக்கையில் வேழநாட்டான் தன் நாட்டின்மீது தண்டெடுத்து வரும் செய்தி அவர்களின் செவிக்கு எட்டுகின்றது. படைத்தலைவனும் அமைச்சனும் அரசன் கட்டளையை எதிர்பார்த்து அருகில் நிற்கின்றனர். அரசி எரியும் கண்ணாளாகின்றாள். அழகியனன் திருநாட்டை அவன்ப திக்கத் திட்டமிட்டான் மனவாள உன்றன் ஆணை! திருநாட்டின் மீதானை! இந்நாட்டின்கண் மட்டற்ற மகிழ்ச்சியுடன் வாழுகின்ற மக்கள்மேல் எனக்குள்ள அன்பின் ஆணை' என்று கூறுவதிலிருந்து அவள் தன்.நாட்டின்மீது கொண்டிருக்கும் பற்று வெளிப்படுவதைக் காண முடிகின்றது. சங்ககால வீரம் துள்ளி எழுந்து சிங்கநாதம் செய்வதை அனல் தெறிக்கும் இவள் சொற்களில் பளிச்சிடுவதைக் காண்கின்றோம். 44. இயல் - 3:3- பக்.5 45. இயல் - 3: 4, 5 - பக். 5