பக்கம்:பாண்டியன் பரிசு-ஒரு மதிப்பீடு.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 கராவின் பாண்டியன் பரிசு-ஒரு மதிப்பீடு சூளுரை: தன் நாட்டின்மீது படையெடுத்து வருகின்றவன் தனக்கு அண்ணன் அல்லன் என்றும், விரைவில் தான் போர்க்களத்தை அடைவதாகவும் அவன் எந்த வட்டத்திலிருப்பினும் அவனைக் கொல்வதாகவும் அல்லது தான் அவனால் மாய்வதாகவும் சூளுரைத்துப் போர்க்களம் ஏகுகின்றாள்" என்அண்ணன் இந்நாட்டில் நுழைவதாயின் என்உயிரில் நுழைந்ததன்பின் நுழைக நானோ அன்னவனின் உயிர்குடித்த பின்ன ரேஇவ் அரண்மனையில் அகத்துாய்மை நிரம்பப் பெற்றே என்கால்வைப் பேன் உறுதி" என்கின்றாள். புறத்துறை "மூதின் முல்லைக்கு" இவள் தகுந்ததோர் இலக்கியமாகின்றாள். புறநானூற்று மறக்குலப் பெண்டிர் போர்க்களத்திற்குச் சென்று போரிட்டதாகத் தெரியவில்லை. ஆனால், பாவேந்தர் படைத்த பெண்ணரசி போர்க்களம் சென்று போரிடச் செய்திருப்பது கவிதைமாந்தர் படைப்பில் ஒரு புதுமை. அனைத்துத் துறைகளிலும் பெண்கள் ஆண்களுக்குச் சமமாக இடம்பெற வேண்டும் என்ற கருத்து கண்ணுக்கினியாள் வாயிலாகச் செயற்படச் செய்திருப்பது புரட்சிகரமான செயலாகும். போர்க்களத்தில் தன் அண்ணன் நரிக்கண்ணனைத் தேடித் திரிந்த கண்ணுக்கினியாள் அண்ணனைக் காணவில்லை. கொலை வாளும் கையுமாக வந்த அவள் தன்னைக் கொண்டவனைப் பினமாகக் காண்கின்றாள். நிலைகலங்கி நிற்கின்றாள். “வீழ்ந்த தோநின் நெடுமேனி! வீழ்ந்த கதிர்நாடிந்நாள்! இலைதீதான் எனஅறிந்தால் அஞ்சி வாடும் இந்நாட்டு மக்கனை, யார்தேற்று வார்கள்? கலைந்ததுவோ என்காதல் ஓவியந்தான்” 46. இயல்- 3: 5 - பக். 5 47. இயல் - 3.5 - பக். 6 48. மூதின் முல்லை. ஒரு புறத்துறை : வீரர்க்கல்லாமல் அம் மறக்குடியில் பிறந்த மகளிர்க்கும் சினம் உண்டாதலை மிகுத்துச் சொல்லுதல் (பு.வெ. 175). 49. இயல்- 8:1- பக். 12