பக்கம்:பாண்டியன் பரிசு-ஒரு மதிப்பீடு.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துணைக்காவிய மாந்தர்கள் 85 என்று கதறி அழுகின்றாள். இதனால் கணவன்மீது அவள் கொண்டிருந்த அன்பும் நாட்டுமக்கள்பால் அவள் கொண்டிருந்த இரக்கமும் பாசமும் வெளிப்படுவதைக் காணலாம். கணவன் இறந்ததால் ஏற்பட்ட துன்பத்தைவிட புறப்பண் கண்டு அடைந்த துன்பந்தான் அவளைப் பெரிதும் வாட்டுகின்றது. அரசி மறக்கள உணர்வுடன் சூளுரைத்துப் போர்க்களம் புகுந்தவள் அரசன் வஞ்சகமாகக் கொல்லப்பட்டபோதும் நாட்டுமக்களை நினைந்தே புலம்புகின்றாள். முதுகு காட்டத் துணிந்ததுவோ தமிழாநின் தமிழ நெஞ்சம்! துயநின் மூதாதை, என்மூதாதை அனைவருள்ளும் எவரேனும் பகைவன் வாளை அருமார்பில் முன்தோளில் ஏற்ற தன்றித் தினையளவும் திரும்பிப்பின் முதுகில் ஏற்ற சேதியினை இவ்வையம் கேட்ட துண்டோ?” எனப் புலம்புகின்றாள். திரும்புங்கால் எதிரில் நின்ற வேழவேந்தன் உணர்ச்சி பொங்க, இரக்கம் மிஞ்ச, “மனைவிளக்கே நின்துணைவன் கதிரை வேலன் வாட்போரை என்னோடு நிகழ்த்தும் காலை, முகமறைத்த ஒரு தீயன் எவனோ பின்னே முடுகிவந்து நடுமுதுகில் எறிந்தான் ஈட்டி” என்று நடந்த உண்மையினைக் கூறிக் கதிரைவேலன் குடிமானம் காத்து நின்றானேயன்றி கெடுக்கவில்லை என விளம்புகின்றான். உண்மைநிலையுணர்ந்த அரசமாதேவி உயிர்த்தெழுகின்றாள். கண்ணுக்கினியாளிடம் நரிக்கண்ணன் “மைத்துணனை நானிழந்தேன் தங்கையே! செத்தவனை இனிக் காண்பதுண்டோ?. திருநாட்டை நீ இழந்து, துணை இழந்து கைத்துாண்டிற் சிறுமீனாய்க் கலங்குகின்ற காட்சியினை நான் காண நேர்ந்ததேயோ?... 50. இயல்- 8:2-3 - பக். 13 51. இயல்- 8:3-4 - பக். 13