பக்கம்:பாண்டியன் பரிசு-ஒரு மதிப்பீடு.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

85 காவின் பாண்டியன் பரிசு- ஒரு மதிப்பீடு சிதைத்தானே கதிர்நாட்டின் உரிமை தன்னைத் திரித்தானே மைத்துனனை! அன்பு வேந்தை!” என்று புலம்பி நீலிக்கண்ணிர் வடித்துக்கொண்டிருக்கையில் நரிக்கண்ணனிடம் கரிய உடைபெற்ற ஆள் வருகின்றான். அவனைக் கண்டதும் வாளைத் தூக்கிப் "புனையுந்தார் மன்னனின்யின் புறத்தில் ஈட்டி புகுத்தியவன் நீதானா” என்கின்றாள். அதற்கு அவன், “இல்லை எனக்கித்தக் கரியஉடை இவரே தந்தார் ஈயுமுன்னே முன்னவர்மேல் ஈட்டி எய்தார்’ என்று உரைக்கின்றான். அதே நொடியில் நரிக்கண்ணன் தன் இடுப்பில் மறைத்து வைத்திருந்த வாளால் தன் உடன் பிறந்தாளைத் தீர்த்துக் கட்டி, “ஒன்றுக்கும் அஞ்சாத என்னை இந்நாள் உயிர்நடுங்க வைத்தவளை ஒழித்தேன் என்று நெடுமூச்சு விடுகின்றான். அவளுடைய வீழ்ச்சி இக்காவியத்தில் அவலச் சுவையின் கொடு முடியை எட்டி விடுகின்றது. 3. ஊன்றிய காவிய மாந்தர்கள் 5°54 (1) பொன்னப்பன்: இவன் நரிக்கண்ணனின் மகன்; அன்னத்திற்கு முறை மாப்பிள்ளை. "கொழுக்கட்டை” என்று பொதுமக்களால் கேலிப்பெயர் சூட்டப் பெற்றவன்' "நரிக்கண்ணன் மகனாய் வந்த கொழுக்கட்டை” என்றும்,” “சாப்பாட்டுப் பொன்னப்பன்” என்றும் இவன் குறிப்பிடப்பெறுவதிலிருந்து இவனது சிறுமை இயல்பை அறியலாம். இவனது முறையற்ற பட்டறிவு சிறிதுமில்லாத பேச்சு சிரிப்பை விளைவிக்கின்றது. 52. இயல் 10:2-3 பக்.16-17 53. இயல் - 11:1 பக். 18 54. இயல் . 11:2 - பக், 18 55. இயல் - 46 இதிலுள்ள 13 பாடல்களும் நகைச் சுவையை விளைவிப்பவை: பக். (78-80) 56. இயல் 44 : 1. பக். 73 57. இயல்-75 : 1. பக்.141