பக்கம்:பாண்டியன் பரிசு-ஒரு மதிப்பீடு.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துணைக்காவிய மாந்தர்கள் 87 காவியத்தில் இக்காவிய மாந்தனுடன் நமது சந்திப்பு ஒருமுறைதான் ஏற்படுகின்றது. ஒருசமயம் நீலியும் அன்னமும் உரையாடிக்கொண்டிருக்கையில் இந்த "உலக்கைக் கொழுந்து” வருகின்றது (அறிவற்ற சடப்பொருள் போல் இயங்குவதால் நாமும் இவனை அஃறிணையாகவே சுட்டுவோம்). வலிய வந்து அன்னத்திடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளுகின்றது. * என்அப்பன் உன்மாமன் ஆத லாலே, எனக்குநீமைத்துனிதான்! நானுன் அத்தான்! பொன்னப்பன் என்றுபெயர் எனக்கு! நான்மேல் போட்டிருக்கும் பொன்னாடை பார்த கையார் உன்னைப்போல் நான்அழகன் அழகி நீயும்' என்ற முதல் அறிமுகப் பேச்சிலேயே இவன் “வண்டவாளம்” தெளிவாகின்றது. “உம்மணா மூஞ்சியையும்’ சிரிக்க வைப்பதாக உள்ளது. அன்னம் கதிர்நாட்டு இளவரசி. இவனோ வஞ்சகமாக கதிர்நாட்டைக் கைப்பற்றிய நரிக்கண்ணனின் மகன். அன்னம் இவனை மணந்துகொள்ள இசைந்ததாகக் கற்பனை செய்துகொண்டு பொன்னப்பன் பேசிய பேச்சுகள் “எள்ளல்" காரணமாக நகைச்சுவையை விளைவிப்பவை. காவியத்தில் நாம் இவனை இரண்டாம் முறை சந்திக்கும்போது இவன் இறப்பைத்தான் அறிகின்றோம். அரண்மனையில் நூறுபூதங்கட்கும் வேலனுடைய ஆட்களுக்கும் இடையே போர் நடைபெறும்போது, தீப்பட்ட காட்டினிலே வேங்கை யோடு சிறுமுயலும் காதல்போல் நரியின் மைந்தன் சாப்பாட்டுப் பொன்னப்பன் தானும் செத்தான்" என்ற முடிவுச் செய்தி நம்மை எட்டுகின்றது. துறவியால் இதனைக் 58. இயல்- 56:1- பக். 76 59. இயல் - 46:2 - பக். 76 60. இயல்- 75:1-பக் 141