பக்கம்:பாண்டியன் பரிசு-ஒரு மதிப்பீடு.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 காவின் பாண்டியன் பரிசு ஒரு மதிப்பீடு கூறியவன் நீலனின் தந்தை. “சிரிக்க உடல் எடுத்தவன்” என்று அன்னத்தால் திறனாயப்பெற்றவன். "உளவியலில் மனவளர்ச்சி குன்றியவர்கள்’ (Mentaily retarded) என்று வகைப்படுத்தப் பெற்றவர்களில் இவன் ஒருவன் என்று கருத இடமுண்டு. (2) நீலன்-நீலி நீலன் நரிக்கண்ணனின் அமைச்சன் மகன்; வஞ்சனைக்கோர் கோள்கலன்; இவனைக் கவிஞர் “அருஞ்சூழ்ச்சி செய்வதிலே மிகக் கைக்காரன்!” என்று நமக்கு அறிமுகம் செய்வார். அன்னத்தின் வாளுக்கு நரிக்கண்ணன் இரையாவதற்கு முன்னமே பாண்டியன் பரிசைத் தான் பெறவேண்டும் என்ற நப்பாசை இவன் உள்ளத்தில் உதிக்கின்றது. இமைக்கின்ற நேரமதும், வீணாக்காமல் எழிற் பாண்டி யன்பேழை, அன்னம், ஆட்சி நமக்கு வருமோ? என்று நினைத்தா னாகி நல்லபல சூழ்ச்சிகளும் நாடு கின்றான்." என்று கவிஞரே கூறுவார். இவன் இரட்டை வேடம் போடுபவன். நீலியைக் காதலியாகக் கொண்ட இவன் அவளைத் தோழியாக்கிக் கொண்டு அன்னத்தை அடைய பல்வேறு தந்திரங்களைக் கையாளுவதைக் காணலாம். நீலன் நீலியுடன் கொண்ட பேச்சுகளின் உட்கிடக்கையை நீலி அறியாது ஏமாந்த சோனகிரியாக இருந்தாலும் நமக்கு இவன் தந்திரம் நன்கு புரிகின்றது.அமைச்சன் மகன் பாங்கியை மனத்தல் தகாது என்று கடிந்த தன் தந்தையிடம், தன் உள்ளம் நீலியிடம் பறிபோய்விட்டதாகவும், அது திரும்பாது என்று உறுதியுடன் அறுதியிட்டதாகவும், அவரும் அதனை ஒப்புக்கொண்டதாகவும் கூறியவன், என்னநீ நினைக்கின்றாய்? அன்னத்திற்கே எழிற்பேழை தனைத்தேடித் தந்து பின்னர் அன்னத்தை ஏன்மணக்க லாகா தென்றால் அவள்என்றன் கண்ணுக்குப் பிடிக்க வில்லை 61. இயல்- 46:13. பக். 80 62. இயல் 57:1 பக். 102 63. இயல். 57:1-பக் 102