பக்கம்:பாண்டியன் பரிசு-ஒரு மதிப்பீடு.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துணைக்காவிய மாந்தர்கள் 89 பொன்னுக்குப் பித்தளையோ ஒத்ததாகும்? பூவுக்கு நிகராகுமோ சருகின் குப்பை? மின்னலிடை கன்னல்மொழி, இன்னும் சொன்னால் விரியுலகில் ஒருத்திநீ, அழகின் உச்சி' என்று நீலியைப் புகழ்கின்றான். இதனைத் தொடர்ந்து வரும் பாடல்களும் இதே பாணியிலேயே செல்லுகின்றன. இத்தகைய சாகசப்பேச்சில் பெண்கள்தாம் வல்லவர்கள் என்று சொல்வதுண்டு. ஆனால், ஆண் அவர்களையும் மிஞ்சுவதை நீலனிடம் காண்கின்றோம். தான் வேழநாட்டிலிருந்து வந்துள்ளபடியால் அன்னத்தை அறிவதற்கு வாய்ப்பில்லை என்றும், ஆதலால் தன்னையும் அவள் தொண்டருடன் சேர்த்துக்கொள்ளப் பரிந்துரைக்க வேண்டும் என்றும், தான் அன்னத்தின்பொருட்டு உடல், பொருள், ஆவி இவற்றைப் பொருட்படுத்தாமல் உழைக்கக் கடவதாகவும் சொல்லுமாறு வேண்டுகின்றான் நீலன். இவன் நரிக்கண்ணனின், தீச்செயல்கட்கு உதவியாளனாகவும் உடந்தையாளனாகவும் செயற்பட்டவன். நரிக்கண்ணனின் மறைவுக்குப்பின்னர் பாண்டியன் பரிசின்மீது நப்பாசை கொள்ளல் இவன் இயல்பாகின்றது. அதனை எப்படியாவது பெறவேண்டும் என்ற ஆசையால் தூண்டப்பெற்று அறிவு மயங்கிச் செயற்படுகின்றான். பாண்டியன் பரிசின்நிலை குறித்துக் கவலைப்பட்ட வேழமன்னன் பாண்டியன் பரிசு அடங்கிய பேழை “ஏழு நாட்களுக்குள் கிடைக்காவிடில் கதிர்நாட்டு உரிமை யாருக்கும் கிடைக்காது” என்ற பறை அறிவிப்பு செய்தவுடன் நீலனின் நப்பாசை வளரத் தொடங்குகின்றது. தாம் பேழையைத் தேடுவதில் செயற்பட்டால் புதிய மன்னனால் தமக்குக் கேடுகள் நேரிடக் கூடும் என்று சில அறிஞர்கள் ஒதுங்கிவிடநீலன் மட்டிலும்"பாடுபட்டுப்பார்ப்போமே" என நினைந்து தேடுதல் பணியில் தீவிரமாக இறங்குகின்றான். சிமிழ்க்காத கண்ணோடு தெருக்கள்தோறும் சிற்றுார்கள் மற்றுமுள்ள இடத்திலெல்லாம் தேடுதல் பணி நடைபெறுகின்றது. 64. இயல் - 57 : 5 - பக். 103