பக்கம்:பாண்டியன் பரிசு-ஒரு மதிப்பீடு.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 காவின் பாண்டியன் பரிசு ஒரு மதிப்பீடு வஞ்சகப்பேச்சு: ஒரு சமயம் மாலைப்போதில் ஆற்றோரமாக நின்றிருக்கும் நீலியைக் காண்கின்றான்.அவளிடம் தந்திரமாகப் பேசி பாண்டியன் பரிசின் நிலைமைபற்றி அறிய அவள் வாயைக் கிண்டுகின்றான். கன்னலொன்று காலடையில் கிடைத்ததைப்போல் அவள் கண்ணெதிரில் கிடைத்தாள்” என முகமன் கூறி பேச்சைத் தொடங்குகின்றான். தந்தை தனது திருமணத்தைப் பற்றிக் கேட்டதாகவும், அதற்கு "அன்னத்தின் தோழி நீலியைத் தவிர எவரையும் மணம்புரிய ஒப்பேன்’ என்றும் கூறிவிட்டதாக மொழிந்து, எழில்யாண்டி யன்பரிசின் நிலைமை என்ன? கொத்தடையும் மலர்க்குழலே என்னி டத்தில் கூறுவதற்குத் தடைஎன்ன என்றான் நீலன்” அதற்கு நீலி மசிவாளா? “அன்னத்தின் துணையாவார் ஒரு சிலரே. அவர்கள் தேடிவிட்டால் எப்படிக் கிடைக்கும்? “தீனியிட்டுக் கோழியினை மடக்குவார்போல் மூடிவிட்டார் பேழையினை!” என்று சொல்லிக் கையை விரிக்கின்றாள். நீலி தான் அன்னத்தின் தோழியாக அமைந்த நிலைமையை எண்ணி எந்தவிதக் குறிப்பையும் வெளியிடவில்லை. அவள் தன் தலைவியிடம் கொண்டிருந்த அன்பு நீலனின் தந்திரப் பேச்சுக்குப் "பருப்பு வேகவில்லை” என்றாகின்றது. மீண்டும், “நின் பொருட்டு அன்னத்திற்கு நன்மை செய்ய நினைக்கின்றேன்”. தன்பொருட்டு வாழ்வான்ஒர் ஏழை மக்கள் தம்பொருட்டு வாழ்வானோர் செல்வன்" ான்று தான் பிறர் நலத்தின் பொருட்டு அனைத்திற்காகவே - வாழ்வதாகக் கூறி நடிக்கின்றான்'. தந்திரப்பேச்சு: நீலி தன் அழகையும் அன்பையும் நீலனுக்குத் துய்ப்பதற்காக வழங்கியவள். ஆகவே, தான் தனக்காக 65, இயல்-57:2. பக். 102 66. தேடப்போன மருந்து காலில் அகப்பட்டது போல், என்பது பழமொழி. 57. இயல் - 57 : 9 - பக்.105 63. இயல்- 57:18. பக். 108 69. நீலன்-நீலிக்கும் இடையே நடைபெறும் உரையாடல் இயல் - 57) படித்துச் சுவைக்க வேண்டிய பகுதியாகும் (22 பாடல்கள்)