பக்கம்:பாண்டியன் பரிசு-ஒரு மதிப்பீடு.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துணைக்காவிய மாந்தர்கள் 91 வாழ்வதைவிட்டு நீலியின் தலைவி அன்னத்தின் பொருட்டுப் பாண்டியன் பரிசைத் தேடுவதற்காகவே தான் வாழ்வதாகப் பொய்யே புகல்கின்றான். நீலியை நோக்கி, "பெண்ணே, நரிக்கண்ணனுக்குத் தான் என் தந்தை அமைச்சன்! ஆனால் அக்கொடியவனைத் தொலைப்பதுதான் என் தந்தையின் நோக்கமாக உள்ளது. விலங்குபழக் கிடுவானின் வென்னா டொன்று வேங்கையிடம் நெருங்கையிலே மகிழ்வதுண்டோ? தெலுங்கினிலே பாடிடுமோர் தமிழன் செய்கை தேனென்றா நினைக்கின்றார் தமிழகத்தார்?” என்று கூறுகின்றான். இறுதி இரண்டு அடிகளில் தனது தமிழியக்கக் கொள்கையினை "வாள்வீச்சாக அமைக்கின்றார் கவிஞர்: இரண்டாம் முறை நீலன் வீட்டில் நீலனும் நீலியும் பேசியிருந்தபோது நீலிமூலம் முதற்பூதத்தைநரிவிடுத்த செய்தியையும் பின்வந்த பூதத்தை “இளைய அன்னம் பெற்றெடுத்த செய்தியையும் அறிந்து கொள்ளுகின்றான் நீலன்” ஆட்படைதான் அடிப்படையோ? அஞ்சி ஓடி அலுப்படைத்தேன் இதுகாறும்’ என்று தன் அறியாமைக்கு வருந்துகின்றான். இந்த உரையாடலில் அன்னத்திற்கு வேலன் அருந்துணையாயிருப்பதையும், அவர்கள் ஒருவர்மேல் மற்றொருவர் காதல் கொள்வதையும், ஒரு துறவி பேழையைத் தேடிவந்து தருவதாய் உரைப்பதையும், இரண்டாம் முறை பெரும்பூதம் விடுத்தது துறவியே என்பதையும் தெளிவாக அறிந்து கொள்ளுகின்றான். அன்னத்தின் முடிசூட்டு விழா முடிந்து விட்டால் தம்முடைய திருமணமும் தொடங்கலாம் என்பதை, நெஞ்சொத்த நாமிருவர் மனம் முடித்து நெடுவாழ்வு தொடங்கலாம் உன்னி டத்தில்" என்று தெரிவிக்கின்றான்.இச்சந்திப்பில் நீலனும் நீலியும்நீலன்வீட்டில் "களவு மணத்தை" (கந்தர்வ மணம்) முடித்துக் கொள்ளுகின்றனர்' 70, இயல்-57:20- பக். 108 71. இயல்- 68:2- பக். 128 72. இயல்- 68 : 3-பக். 129 73. இயல்- 68 : 5 பக். 129 74. இயல் - 68 : 8 - பக். 30