பக்கம்:பாண்டியன் பரிசு-ஒரு மதிப்பீடு.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 காவின் பாண்டியன் பரிசு - ஒரு மதிப்பீடு இதனைக் கவிஞர், கட்டிலிட்ட அறைகாட்டி நீலி தோள்மேல் கையிட்டான் பெருவீடு கமழச் சென்றார்’ என்பார். “பெருவிடு” என்பது துறவிகள் கூறும் "சிற்றின்பம்” என்ற பொருளில் கையாளப்பெற்றுள்ளது. இன்னொரு தந்திரம்: "துறவியார் கிளப்பிவிட்ட பெரும் பூதத்திற்கு அஞ்சி ஆனையூர்ப்பள்ளியில் புகலிடம் கொண்டு சில மறவர்களிடமும் உரையாடிக்கொண்டிருந்தபோது, நாமும் பானையினைத் தலைகவிழ்த்துச் செய்த தைப்போல் பகைவர்களும் ஒருபூதம் செய்தார் போலும்' என்று கூறுகின்றான். இச்சமயத்தில் நீலன் நீலியிடம் பெற்ற செய்திகளில் சில சொல்ல அங்கு வருகின்றான். அன்னத்தின் ஆட்கள் பேழையை அரண்மனையில் தேடப் போகும் செய்தியை அவிழ்த்துவிட்டு அதைத் தடுக்க வேண்டுமானால், இங்கிருந்தே, எல்லோரும் பூதங்கள்போல் எழில்மாற்றி மொழிமாற்றிக் கிளம்ப வேண்டும்” என்ற திட்டத்தைக் கூற நரிக்கண்ணன் இதனை ஒப்புக்கொண்டு திட்டத்திற்குப் ‘பச்சைக் கொடி காட்டினான். மேலும் ஒரு தந்திரம்: நீலன் அரண்மனைக்குச் சென்று அன்னத்தின் ஆட்களைச் சந்திக்கின்றான். அன்றிரவு வரவிருக்கும் பொய்ப்பூதம் நூறில் நரிப்பூதம் ஒன்று என்றும், மற்றெல்லாம் உடனிருக்கும் பொய்ப்பூதம் படைமறவர்கள் என்றும் அறிவிக்கின்றான் அன்னத்திடம். மேலும் அங்கு இருந்தோரைப் பார்த்து, துறவியார் இவர்தாமோ! வேலனாரும் துயபிற நண்பர்களும் இவர்கள் தாமோ? திறைய.எனக் கன்புண்டு தங்கள் மீதில்! நேரினிலே மட்டுந்தான் கண்டதில்லை' 75. இயல் - 68 : 8 - பக் 130 76. இயல்- 59:2. பக். 31 77. இயல் 70 : 3. பக். 133 78. இயல்- 7:3- பக், 135