பக்கம்:பாண்டியன் பரிசு-ஒரு மதிப்பீடு.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துணைக்காவிய மாந்தர்கள் 93 என்று பாசாங்கு செய்து நடிக்கின்றான். தகவல் தந்தமைக்கு வேலன் நீலனுக்கு நன்றி தெரிவிக்கின்றான். துறவியார் நீலன் மூலம் அவன் தந்தை இடது கையில் வேப்பிலை வைத்திருப்பான் என்றும், மன்னன் தலையில் மாம்பூ இருக்கும் என்றும் தெரிந்து கொள்ளுகின்றார். பின்னொருகால் நீலன் நீலியிடம் பேசிக்கொண்டிருந்தபொழுது, மகிழ்ச்சிக்கோர் அடிப்படைதான் பேழைச் செய்தி வற்றாத அன்பூற்றே சற்றே கேட்பாய்! புகழ்ச்சிக்கே உரியவளாம் அன்னத் திற்குப் பொன்முடியைச் சூட்டிவிட்டால் நாட்டார் பெற்ற இகழ்ச்சி முடிவடையுமடி’ என்னும் நடிப்புப் பாணியில் வஞ்சப் புகழ்ச்சியாகப் பேசுவதைக் காண்கின்றோம். இன்னும் அவன் மனத்தில் பாண்டியன் பரிசைப் பெறும் நப்பாசை அகன்றபாடில்லை! இறுதியாக வேலன் பேழையை எடுத்து வருங்கால் அவனை ஆட்களை வைத்து எதிர்த்துப் பேழையைப் பறிக்க எண்ணுகின்றான். இம்முயற்சியும் பலிக்கவில்லை. அன்னம் இறந்ததாகப் பொய்வதந்தியை நீலன் மூலம் பரப்பிய சூழ்ச்சியும் தவிடுபொடியாகி விடுகின்றது. நாம் இவன் நிலைக்குப் பரிதாபப்படுகின்றோம். வன்மையற்ற காவிய மாந்தன் இவன். நரிக்கண்ணன் வெளிப்படைப் பகைவனாக இருத்தலின் அவனது செயல்களும் அவற்றின் விளைவுகளும் இறுதியில் அவனது பரிதாபகரமான முடிவும் அனைவருக்கும் வெட்டவெளிச்சமாகத் தெரிந்தன.நீலனோ உட்பகைவன். ஆகவே அவனுடைய செயல்களும் எண்ணமும் அவன் முடிவும் எவரும் அறியாவண்ணம் கருக்கொண்டு வளர்கின்றன. ஆனால் அவை செயல்திறனும் செயற்படும் ஆற்றலும் இன்றி வெம்பிப் பயனற்றுப் போகின்றன. வள்ளுவர் கூறும் உட்பகையின் அறிவாற்றலைக் கவிஞர் நமக்குப் புலப்படுத்துகின்றார். ஆனால், அவனுடைய முடிவைக் கூறாது விடுக்கின்றார். 79. இயல்- 79:2. பக். 151