பக்கம்:பாண்டியன் பரிசு-ஒரு மதிப்பீடு.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 சரணின் பாண்டியன் பரிசு ஒரு மதிப்பீடு (3) கணக்காயர் சீனி. இவர் காவியத்தில் வரும் துணைக் காவிய மாந்தர்களில் முக்கியமானவர். வேலனுக்கும் அக்காலத்தில் வாழ்ந்த வேறுபல இளைஞர்கட்கும் கலைகள் பயிற்றுவித்து நேர்மையையும் நாட்டுப்பற்றையும் அவர்களிடம் ஊட்டியவர். இவர் முயற்சியால்தான் ஆத்தாள் கிழவி அரண்மனையில் பணிச்சியாக அமர்கின்றாள்; தனது நேர்மையாலும் கடமையுணர்வாலும் அரசமாதேவிக்குத் துணையாளாகி அன்னத்திற்கும் வளர்ப்புத் தாயாகின்றாள். இவர்தான் அரியேறு போன்ற வேலனுக்கும் புலிகள் போன்ற வேலனுடைய நண்பர்கட்கும் கலைகளைப் பயிற்றியதுடன் நில்லாது நாட்டின் உண்மை நிலையையும் கூறுகின்றார். நரிக்கண்ணனின் சூழ்ச்சியினால் கதிர்நாட்டின்மீது வேழநாட்டான் மேற்கொண்ட படையெடுப்பு, கடும்போரில் கதிர்நாட்டரசனைப் பின்னின்று ஈட்டிஎய்து கொன்றமை, தங்கையென்றும் பாராது அரசமாதேவியைக் கொன்றமை, அன்னத்தையும் ஆத்தாள் கிழவியையும் தீர்த்துக்கட்டக் குறி வைத்துள்ளமை முதலிய நிகழ்ச்சிகளைத் தெளிவாக விளக்கிக் கதிரைநாட்டு அரசியலில் முக்கிய பங்கு பெறச் செய்கின்றார்; தாமும் இயலும்போதெல்லாம் இயன்றவாறு பங்கு பெறுகின்றார். எதிரிகள் ஆத்தாள் தங்கியிருக்கும் குடிசையைச் சூழ்ந்து தாக்கும் நிலையை வேலனுக்கு எடுத்துக் கூறி அவனைக் கொண்டு பலவீரர்களின் துணையால் ஆத்தாளையும் அன்னத்தையும் காக்கின்றார். அவர்கள் தம் உருவங்களை மாற்றிக்கொண்டு கணக்காயர் வாழும் தனிவீட்டை அடைகின்றனர். பின்னர் அவர்களை மாற்றுருவத்துடன் அரண்மனைக்கு இட்டுச் செல்லுகின்றார். ஆத்தாள் நரிக்கண்ணனின் அடாத செயல்களைத் தோலுரித்துக் காட்டித் தன்னையும் அன்னத்தையும் உருவம் மாற்றி தாம் இன்னார் இன்னார் என்று அறிமுகப்படுத்திக் கொள்கின்றனர். வேழநாட்டு மன்னனின் ஆணைப்படி பேழையைத் தேடும் பணியில் இவரும் தக்க படையுடன் பங்கு கொள்கின்றார். கடிதாகவும் தேடுகின்றார். தன்னிடம் கற்கும் திறனுடைய இளைஞர்களை