பக்கம்:பாண்டியன் பரிசு-ஒரு மதிப்பீடு.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துணைக்காவிய மாந்தர்கள் 95 அழைத்தழைத்துத் தான் நினைக்கும் இடமெல்லாம் தேடச் செய்கின்றார். நீலன் யோசனைப்படி நரிக்கண்ணனும் அவனைச் சேர்ந்தோரும் பூதங்களாக அரண்மனையில் நுழைந்தபோது கணக்காயரும் அவர்தம் மாணாக்கர்களும் அரண்மனையில் நுழைந்து தம் பங்கைச் சிறந்த முறையில் ஆற்றுகின்றனர். துறவியாரும் விரைவில் பாண்டியன் பரிசை வேலனிடம் சேர்ப்பிக்குமாறு தூண்டுகின்றார். வேலன் பேழையுடன் வரும்போது நீலனுடைய ஆட்கள் அவனுடன் மோதிப் பேழையைப் பறிக்க முயலும்போது கணக்காயரும் அவர்தம் மாணவரும் வீரப்பர்க்குக் கையுதவியானவர்களும் நீலன் ஆட்களைப் பிணக்காடாக்குகின்றனர். வேலன்-அன்னம் திருமணத்திலும் முடிசூட்டு விழாவிலும் வந்திருந்து வாழ்த்துக் கூறுகின்றார் இச்சான்றோர். இங்ங்ணம் தொடக்கம் முதல் இறுதிவரை கதிர் நாட்டு அரசியலில் தொடர்ந்து பெரும் பங்கு கொண்டவர் சீனி என்னும் கணக்காயர். (4) எட்டி இவன் நரிக்கண்ணனின் எடுப்பார் கைப்பிள்ளையாக இருந்து பூதமாக வெளிப்பட்டவன். (5) மாழை. இவன் வேழநாட்டரசனின் மருமகன். இன்னும் ஒருவாரத்தில் பரிசுப் பேழை கிடைக்காவிடில் கதிர்நாட்டின் உரிமை இவனுக்குப் போகும் என்பதாக அறிவித்தான் வேழநாட்டு மன்னன்.