பக்கம்:பாண்டியன் பரிசு-ஒரு மதிப்பீடு.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல் - ? பூதம் பற்றிய கூத்துகள் தெய்விக சம்பந்தமான நிகழ்ச்சிகள் கலந்து வருவது பெருங்காப்பியங்களில் (Epics) ஒரு முக்கிய நிகழ்ச்சியாக அமைந்திருப்பதைக் காணலாம். சிலப்பதிகாரம், இராமாயணம், சிந்தாமணி, மணிமேகலை போன்ற தமிழ்க் காவியங்களில் காப்பியக் கவிஞர்கள் இந்தக் கூறினை அமையாமல் தங்கள் காவியங்களை அமைத்திலர். மேனாட்டுக் காப்பியங்களில் கூட இந்தத் தெய்விகக் கூறுகள் (Supernatural elements) கலந்தே அமைக்கப்பெற்றுள்ளன. பாவேந்தர் தெய்வ நம்பிக்கைகளையும் மூடப்பழக்கங்களையும் வெறுப்பவர். மூடநம்பிக்கைகளை மக்கள் மனத்திலிருந்து அகற்றுவதில் பெருமுயற்சி எடுத்தவர், தம் கவிதைகளில் இப்போக்கினை அமைத்திருப்பதைக் காணலாம். ஏன்? தம் குருநாதரிடம் இருந்துதான் மூடநம்பிக்கைகளை அகற்றும் முறையைப் பெற்றிருக்கலாம் என்று தோன்றுகின்றது. பாரதநாட்டு மக்களின் அவர்காலத்து நிலைமையை இவ்வாறு எடுத்துக்காட்டி நையாண்டி செய்வார் பாரதியார். நெஞ்சு பொறுக்கு திலையே - இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்து விட்டால் அஞ்சி யஞ்சிச் சாவார் - இவர் அஞ்சாத பொருளில்லை அவனியிலே, வஞ்சனைப் பேய்கள்என்பார் - இந்த மரத்தில் என்பார்; அந்தக் குளத்தில் என்பார்; துஞ்சுவது முகட்டில் என்பார் - மிகத் துயர்ப்படு வார் எண்ணி பயப்படுவார் மந்திர வாதி என்பார் - சொன்ன மாத்திரத்தி லேமனக் கிலிபிடிப்பார், வந்திர சூனியங்கள் - இன்னும் எத்தனைஆயிரம் இவர்துயர்கள்!