பக்கம்:பாண்டியன் பரிசு-ஒரு மதிப்பீடு.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இம் பற்றிய கூத்துகள் 97 தத்தபொருளைக்கொண்டே - ஜனம் தாங்குவர் உலகத்தில் அரசரெல்லாம்; அந்த அரசியலை - இவர் அஞ்சுதரு பேயென்றெண்ணி நெஞ்சம் அர்வார் என்ற பாடல்களில் இந்த எள்ளல் போக்கினைக் காணலாம். தெய்விகக் கூறுகட்குப் பதிலாகப் பேய்பற்றிய மக்கள் கருத்தினைப் “பாண்டியன் பரிசில்" அமைத்துக் கிண்டல் செய்கின்றார் பாவேந்தர், எள்ளி நகையாடுகின்றார். இக்கருத்துகள் அடங்கிய பாடல்கள் பன்முறை படித்து அநுபவிக்கத்தக்கவை; நகைத்து மகிழத்தக்கவை, கருத்துகள் எள்ளி நகையாடத் தக்கவை. மூன்று நிலைகளில் பூதம்பற்றிய கருத்தினை அமைக்கின்றார் பாவேந்தர். அவற்றை ஈண்டு விளக்குவோம். என்பாண்டி வன்பரிசை எனக்க ளிப்போன் எவனெனினும் அவனுக்கே உரியோன் ஆவேன்' என்று அன்னம் சொன்னதும், அக்கருத்தை ஏற்றுக் கொள்கின்றான் வேழ நாட்டரசன். இக்கருத்தையே முரசறைவித்து எல்லோர் கவனத்திற்குக் கொண்டுவருவதுடன் தேடுவோர்க்கும் பாதுகாப்பும் அளிக்கின்றான். முதலில் அரண்மனையில்நுழைந்து படைத்தலைவன் ஆளியின் தலைமையில் படைபலத்தைக் கொண்டு தேடுகின்றனர். கணக்காயன் தலைமையில் பலர் தேடுகின்றனர். ஆத்தாளும் தாத்தாவைப்போல் உருவம் மாற்றிக்கொண்டு தேடுகின்றாள். முதல் நிலை: “கமழாத புதர்ப்பூப்போல் திருடர் யாரும் கதிர்நாட்டின் மலைமேல் இருத்தல் கூடும்” என்று கருதி பிறர் யாரும் வாராதிருக்கவும் நரிக்கண்ணன் சூழ்ச்சிப்படி எட்டி என்போன் பூதம்போல் உருமாற்றிக்கொண்டு கூச்சலிடுகின்றான். அதிகாலை மலைச்சாரலில் உள்ள நன்செயை நாடி உழச்சென்ற உழவர்கள் “சுடரடிக்கும் கொடுவாளும் கையுமாக"ஒரு பூதம் இருப்பதைக் கண்டு அஞ்சி ஊர் திரும்புகின்றனர்." 1. பா.க.தே.கீ:பாரத ஜனங்களின் தற்காலநிலைமை- 1,2 2. இயல் - 41:1- பக். 68 3. இயல் - 48:1-பக், 84 4. இயல் - 49:2- பக், 85