பக்கம்:பாண்டியன் பரிசு-ஒரு மதிப்பீடு.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 காவின் பாண்டியன் பரிசு ஒரு மதிப்பீஇ என்கின்றான். பூதம் விளைவிக்கும் செயல்களையுடைய பீதியினைக் குறித்து, மூட்டையொடு கழுதைநடந் திருக்கும், பின்னே முழுகணன் ஏகாலி செல்வான், அந்தப் பாட்டையிலே பஞ்சுநிறை கூடை போகும் உழவர்க்குப் பழங்கூழும் எடுத்துச் செல்வார், காட்டுநீலச்சாயம் கொண்டு செல்வார் குலுக்குநெடுக் காப்மக்கள் பலபேர் செல்வார்: காட்டாளோ பூதம்என்பான், அஞ்சி வீழ்வார்! கரும்பூதம் வெண்பூதம் ஆவார் யாரும். அரண்மனையின் யானைவரப், பூதம் என்றே அலறினார், மாவுத்தன் வைக்கோல் வண்டி எருதின்மேல் வீழ்ந்தான் சாய்ந்து வைக்கோலும் எழுப்பி வைத்த சாரந்தான் நெளிய உச்சி இருத்தகொல்லுற்றுக்கா ரன்கு தித்தான்! எரியடுப்பால் கூரையும்வைக் கோலும் பற்றித் தெருப்பற்றி எரிகையிலே, பூதம் அங்கே சிரிப்பதென அலரினார் அடுத்த ஊரார்' என்றவாறு கூறுவான். கூறியவன், “அஞ்ச வைக்கும் பூதத்தை அஞ்சவைக்க அஞ்சாறு பூதத்தை நாமனுப்பிக் கொஞ்சிவினை யாடவிட்டால் நல்லதாகும் கூறுகநீர் விடை” என்றான். இதனைக் கேட்டு, நெஞ்சில்வைத்தே வீரப்பன் “வேண்டு மானால் நிகழ்த்துவோம் நடப்பதெல்லாம் அறிய வேண்டும் வஞ்சமுற்ற நரிக்கண்ணன் ஆட்கள் எந்த வழிச்சென்றார் என்பதையும் காண்போம்” என்றான்" இந்தத் திட்டம் செயற்படுகின்றது. 10. இயல் 56: 78. பக் 100 11. இயல் - 56 : 9 - பக். 101