பக்கம்:பாண்டியன் பரிசு-ஒரு மதிப்பீடு.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உணர்வின் வெளிப்பாடு.உலகில் தோன்றிய அவதாரங்களும், வன்முறை கொண்ட கொலைமிகும் போர்களையோ, போரில் வஞ்சனை செய்து எதிரி ைரீழ்த்துவதையோ கைவிடவில்லை என்பதற்குக் குருட்சேத்திரப் போரே சான்று.இறையினாலேயே யுகத்தொறும் மறம் தலைதூக்குவதைத் தடுக்க இயலவில்லை என்பதுடன், அதனால் அவ்வப்போது அவதாரம் எடுப்பதாகவும் கூறும் அந்த வாக்கியம்'இறைக்குப் பெருமை சேர்ப்பதல்ல என்பதும் குறிப்பிட வேண்டியதாகும். பகவத் கீதை'யில் அறத்திற்கு மாறான கருத்துகள் பல இடம் பெற்றிருப்பதைப் புரட்சிக்கவிஞர் எடுத்துக் கூறியவர்.அவரதுநூல் குறித்த ஆய்விலாவது இத்தகைய மேற்கொள்தவிர்க்கப்பட வேண்டும் என்பது என் விழைவாகும். நூலாசிரியர் பேராசிரியர் சுப்பு ரெட்டியார் அவர்கள், பரந்த நோக்குடையவர். அவரது மதப்பற்று அகவுணர்வாக அமைவது அன்றிப் புறப்பொலிவாக ஆவதில்லை என்பதை அறிந்தவனாதலின், இப்படிப்பட்ட கருத்தை வலியுறுத்தும் நோக்கத்தில் இது இடம்பெறவில்லை என்றே நான் எனினும் வீழ்ச்சியுற்ற தமிழர்தம் நிலையை மாற்றிடும் உள்ளத்தவாதலின் தமிழர்கட்குப்பெருமை சேர்க்கும் வகையான இலக்கிய மேற்கோள்களையே புரட்சிக் கவிஞர் போன்றாரின்நூல் மதிப்பீட்டில் அவர் எடுத்தாள்வது சிறப்பாகும்.இந்த ஆய்வுநூலைவழங்கியுள்ள பேராசிரியரின் ஆர்வமும், தொண்டும் தமிழுக்கு எந்நாளும் கிடைத்திட எனது வாழ்த்துக்கள்: க. அன்பழகன்