பக்கம்:பாண்டியன் பரிசு-ஒரு மதிப்பீடு.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இம்பற்றிய சூத்துகள்-101 தென்மலையில் நரிக்கண்ணன் ஆட்கள் பேழையைக் கண்டறிய நிலத்தைத் தோண்டுகின்றனர். அப்போது பூதம் ஒன்று வெளிப்படுகின்றது. எல்லோரும் வெருண்டோடி நரிக்கண்ணனிடம் செய்தியைச் சொல்லுகின்றனர். நின்றதொரு நெடுப்பூதம் நரிக்கண்ணன்பால் நிகழ்த்தினார் தென்மலையில் எவரு மில்லை!" நரிக்கண்ணன் தென்மலைக்கு ஒடுகின்றான். படை மறவர்களில் பலர் அவனுடன் செல்லுகின்றனர். பெரிய பூதம் ஒன்று நெடுவேலைச் சுழற்றி நின்று ஆடியதையும் அரற்றி நிற்பதையும் காண்கின்றனர். உடனே நடுநடுங்கி மூடப்பெற்றிருந்த தெருக்கதவை உதைத்துத் தள்ளி உட்புகுந்து தாழிட்டுக் கொள்ளுகின்றனர். பாடுபட்டு நான்கண்ட சூழ்ச்சி தன்னைப் பயன்படுத்திக் கொண்டானே அவன்யார் என்றே!” நரிக்கண்ணன் எண்ணினான்' பூதத்தை நான்குமுறை நோக்குகின்றான். நோக்க நோக்கப் பெரிதாகும் நிலையைக் காண்கின்றான். உடல் நடுங்கத் தொடங்குகின்றது. பெரும்பூதம் தென்மலையில் இருந்த செய்தி தெரியாமல் இருந்தேனே எணமுடித்தான்! தென்மலைக்கும் அரண்மனைக்கும் இடையில் வாய்த்த அரைக்காதம் அதைநினைத்தான் ஒட லானான் அரண்மனைக்குள் பெரும்பூதம் என்று கேட்டான். வடதிசையைத் தான்மறந்து மேற்கு நோக்கி வாழ்ந்தேன்கெட் டேனென்றே ஓடும்போதும் தடதடென ஆயிரம்பேர் எதிர்வந் தார்கள் சரியாக ஒருதென்னை அளவு யர்ந்த கொடும்பூதம் வந்ததெனக் கூறி னார்கள் குள்ளநரி பட்டதுயர் கூறொணாதே பிடித்தான்பின் ஓட்டத்தைக் கிழக்கு நோக்கிப்! பெரும்பூதம் என்றுரைத்தார் அங்கும் பல்லோர்" 12. இயல் - 65:1- பக். 122 13. இயல் - 65 : 2-3 - பக். 122 14. இயல் - 65 : 3-4 - பக்123