பக்கம்:பாண்டியன் பரிசு-ஒரு மதிப்பீடு.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2ே சுதாவின் பாண்டியன் பரிசு-ஒரு மதிப்பீடு இந்தநிலையில் அரண்மனையில் நரிக்கண்ணனுடைய ஆட்கள், பெண்கள் முதலியோர் அருகிலிருந்த, தூண், கதவு, பெட்டி யாவும் பெரும் பூதமாகத் தெரியக் கண்டு கதறி ஒடுகின்றனர். சிலருக்குப் பயக்காய்ச்சல் ஏறுகின்றது! சிலர் உயிரையே விடுகின்றனர். சிற்சிலர் அஞ்சியோடி பரணுக்குள் ஐக்கியமாகின்றனர். நரிக்கண்ணனுடைய பூதச்சூழ்ச்சி அவனையே திகைக்க வைத்து விடுகின்றது. இந்த நிலையில் அன்னம், வேலன் - நீலி இவர்களுடன் அரண்மனைக்குள் புகுகின்றாள். சிரித்தபடிச் சொல்லுகின்றாள். ஆளுயரம் இருந்ததுவாம் நரியார் பூதம்: ஆள்.ஒருவன் தோளிலோர் ஆளையேற்றத் தோளுயர்ந்த இரட்டையாட் பூத மன்றோ கடுநெருப்பைக் கக்குகின்ற நமது பூதம்: கோளுக்குங் கோள்பொய்க்குப் பொய்யே வேண்டும் கொடியவன்வெட் டிய கிணற்றில் அவனே வீழ்ந்தான் நாளும்எழில் நாட்டார்கள் பூத மென்று நடுங்குநிலை இரங்கத்தக்கதுதான் என்றாள்.' மூன்றாம் நிலை முதலில் விட்ட பூதம் நரிக்கண்ணனுடையது. இரண்டாம் நிலையில் எழுந்த பூதம் அன்னத்தினுடையது (வீரப்பன் தோழன் யோசனைப்படி வீரப்பன் பச்சைக் கொடிகாட்ட அதினின்று பிறந்தது.நீலன் வீட்டில் நீலனும்நீலியும் பேசிக்கொண்டிருக்கும் போது நீலி கூறுவாள்: முன்வந்த பூதத்தை நரிவிடுத்தான்! முதற்பூதம் நடுநடுங்கிச் சாகு மாறு பின்வந்த பூதத்தை இளைய அன்னம் பெற்றெடுத்தாள்" என்கின்றாள். இதுகாறும் பூதத்தைப்பற்றிக் குழப்பமான கருத்தைக் கொண்டிருந்த நீலனுக்கும் “ஓர் ஆளும் கறுப்புடையும் பூதம்” என்ற தெளிவு பிறக்கின்றது. இதனை, 15. இயல் - 66:12 - பக். 124 16. இயல் - 68:2- பக். 128