பக்கம்:பாண்டியன் பரிசு-ஒரு மதிப்பீடு.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உஇக் பற்றிய கூத்துகள் 103 வாட்படையும் வேற்படையும் கண்டு நெஞ்சம் மலைப்படையக் குதித்தபூ தத்துக் கெல்லாம் ஆட்படைதான் அடிப்படையோ? அஞ்சி - அலுப்படைந்தேன் இதுகாறும்" என்று கூறுவதால் அறியலாம். இப்போது நீலி மூலம் ஒரு துறவி வேலனுக்கு உதவுவதையும், பேழையைப்பற்றி எவரும் கவலையின்றி இருப்பதையும், எதையும். நீலியறியாமல் மறைவாகப் பேசிக் கொள்வதையும் அறிகின்றான். நரிக்கண்ணன் அஞ்சியோடி அடைந்த ஆனையூர்ப் பள்ளியில் தன் ஆட்களிடமும் அமைச்சனிடமும் பேசிக்கொண்டிருக்கும்போது, அவர்கள் “இன்றடைந்த பூதத்தை எங்கேனும் கண்டதுண்டோ?” என்று வினவ, அவர்கள் அதுபற்றிக் “கண்டதும் இல்லை, கேட்டதுமில்லை” என்கின்றனர். அமைச்சன் சொல்வான்: ஆனையூர் தனில்வந்தோம் இவ்விடத்தில் அப்பூதம் வாராத தென்ன, நாமும் பானையினைத் தலைகவிழ்த்து செய்த தைப்போல் பகைவர்களும் ஒருபூதம் செய்தார் போலும்! ஏனிதற்கு நாம் அஞ்ச வேண்டும்?" என்கின்றான். இதற்கிடையில் நீலியிடம் பெற்ற நல்ல செய்திகள் சில சொல்ல வருகின்றான் நீலன். வந்தவன் நரிக்கண்ணனை நோக்கி, பூதத்துக் கஞ்சுவதோ வேந்தே? அஃது பொய்ப்பூதம்: ஆள்கொண்டு செய்த பூதம், ஊதப்ப றக்குமொரு சருகு! வற்றி உளுத்தஒரு மிலார்" என்றுகூறி அஃது ஒரு துறவியின் சூழ்ச்சி என்று தெளிவு படுத்துகின்றான். அரண்மனையில் பேழையினை அன்னம், வேலன் முதலியோர் தேடுவதையும், ஒருகால் அஃது அங்கு கிடைக்கலாம் என்றும் சொல்லிவைக்கின்றான். அங்குச் செல்லுமாறும் நரிக்கண்ணனை ஆற்றுப்படுத்துகின்றான். 17. இயல் - 68:3- பக். 129 18. இயல் - 69:2-பக், 131 19. இயல் - 70:1- பக். 132