பக்கம்:பாண்டியன் பரிசு-ஒரு மதிப்பீடு.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 கதாவின் பாண்டியன் பரிசு ஒரு மதிப்பீடு இங்கிருந்தே, எல்லாரும் பூதங்கள்போல் ழிைல்மாற்றி மொழிமாற்றிக் கிளம்ப வேண்டும்; அங்கிருக்கும் ஊர்மக்கள் அஞ்சிப் போவார்; அன்னத்தின் ஆதரவும் குறைந்து போகும்; சிங்கம்வரக் கண்டஒரு மானைப் போல, சேயிழைதன் கூட்டமொடு பறந்து போவாள்; எங்கிருக்கும் ஆட்களையும் அனுப்பீர் என்றான் ஏற்பாட்டை நரிக்கண்ணன் ஒப்புக் கொண்டான்' நீலன் அரண்மனைக்கும் ஏகி அன்னத்தின் ஆட்களிடமும் நரிக்கண்ணன் முதலியோர் பூதமாக வரவிருப்பதாக “வத்தி வைக்கின்றான்”. அன்னத்திடம் தனிமையாக, இன்றிரவு பூதங்கள் நூறு வந்தே இங்குள்ளார் அனைவரையும் கொன்று போடும்! ஒன்றதிலே நரிப்பூதம் மற்ற எல்லாம் உடனிருக்கும் படைமறவர் எனும்பூதங்கள்: என்று சொல்லிவைக்கின்றான். துறவியார் கேட்ட கேள்விக்கு அமைச்சன் (நீலனின் தந்தை இடதுகையில் வேப்பிலையை வைத்திருப்பான் என்றும், மன்னன் (நரிக்கண்ணன்) தலையில் மாம்பூ அடையாளமாக இருக்கும் என்றும் தெரிவிக்கின்றான். இந்தப் பூதங்களும் அன்னத்தின் ஆட்களும் மோதும்போது நரிக்கண்ணன் அன்னத்தின் வாளுக்குப் பலியாகின்றான்! பனையி னின்று காய்இற்று வீழ்வதுபோல் நரிக்கண்ணன்தன் கருத்தலைவீழ்ந்ததுவே.அன்னத்தின் வாளால்' பூதப்போர்வை கிழிகின்றது."தீதொன்றும் இல்லை.இனித்துயில்வீர்!” என்று துறவியார் சொல்ல, எல்லோரும் மனக்கவலை நீங்குகின்றனர். தெய்வத்தை - இறைவனை மூலமாகக் கொண்டு சில நம்பிக்கைகள் எழுகின்றன; மக்களிடையே அவை வேர்விட்டுப் 20. இயல் - 70 : 3 பக். 133 21. இயல் - 71; 2 - பக். 134 22. இயல் - 74 : 1. பக். 140