பக்கம்:பாண்டியன் பரிசு-ஒரு மதிப்பீடு.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூதம் பற்றிய சூத்துகள்-105 பதிகின்றன.இவற்றைப் பெரும்பாலோர் ஏற்றுக்கொள்வதால் அவற்றை மேனாட்டுக் கவிஞர் தம் காவியங்களில் இடம்பெறச் செய்கின்றனர். மூடநம்பிக்கைகளும் தெய்வநம்பிக்கையின் பரிணாமங்களே. இவையும் கல்வியறிவில்லாத பாமர மக்களிடையே ஆழமாகப் பதிந்துள்ளன. இதனால்தான் தந்தை பெரியார் கடவுளின் தலையிலேயே கை வைக்கின்றார். விளைவு இறைமறுப்புக் கொள்கை பிறக்கின்றது. அவர்வழி வந்த பாவேந்தர் அவர்காட்டிய வழியையே பின்பற்றுகின்றார். மூடநம்பிக்கையின் விளைவாக எழுந்த "பூதங்களை”த் தம் காவியத்தில் எதிர்மறை உத்தியாக - எதிர்மறை இலக்கணையாக - இடம் பெறச் செய்கின்றார். காவிய மாந்தர்கள் வாயில் வைத்துப் பூதக்கூத்தை "இதன் பொருள்தான் மடமைமேல் வெற்றி” என்று பேசச் செய்கின்றார். பூதக் கருத்தைக் காவியத்தில் நுழைத்து காவியத்தைச் சிறப்படையச் செய்வதுடன் அக்கருத்தையே கருவியாகக் கொண்டு சமூகத்தில் அருகுபோல் வேரூன்றியிருக்கும் மூடநம்பிக்கையைச் சாடுவதையும் நாம் காண்கின்றோம். தம் காலத்தில்தாம் சமூகத்தில் காணும் மூடநம்பிக்கையைக் குறித்து கவிஞர் வருந்துவதையும் காணமுடிகின்றது. 23. இயல் - 68:2. பக். 128