பக்கம்:பாண்டியன் பரிசு-ஒரு மதிப்பீடு.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல் - 8 காவிய நடை “நடை என்பது தமிழில் ஒழுக்கத்தைக் குறிக்கும்; செல்லும் செலவையும் குறிக்கும்.'"நட” என்பது இரண்டிற்கும் பகுதியாகும். செலவைக் குறிக்கும்பொழுது அது தொழிற் பெயராகின்றது; பிறபொருளைக் குறிக்கும்பொழுது தொழிலாகு பெயராகும். அச்சொல் செய்யுள் நடை, உரை நடை என்னும் பொருள்களில் வழங்கும்பொழுது செய்யுள் உரைகள் செல்லும் செலவு என்பதைக் குறிக்கும். கால்நடையின் செலவு ஒருவரை ஒரிடத்திலிருந்து பிறிதோரிடத்திற்குக் கொண்டு செலுத்துவதுபோல் இந்நடைகளும் செய்யுட் பொருளையும் உரைக்கும் உரைப்பொருளையும் ஒருவர் மனத்திலிருந்து பிறிதொருவர் மனத்திற்குக் கொண்டு போய்ச் சேர்க்கின்றன”. அவ்வாறு கொண்டுபோய்ச் சேர்க்கும் கருவிகள் செய்யும் உரைநடைகளில் வழங்கும் சொற்களாகும். அன்றாட வாழ்க்கையில் நாம் பேசிப் பயின்று வரும் நடையை உரைநடை எனலாம். அஃது உரைத்துப் போதலின் உரையும், தேங்கி நிற்காமல் நடந்து போதலின் நடையும் ஆயிற்று. இலத்தீன் மொழியிலுள்ள (Oratio Pedastris) என்ற தொடர் தமிழிலுள்ள "பேச்சு நடை” என்ற தொடரோடு ஒப்பிடத்தக்கதாக உள்ளது. உரைநடை இக்காலப் புதினம் போன்ற வசன காவியங்களிலும், சிறுகதைகளிலும், ஆய்வுக்கட்டுரைகளிலும் பெருவழக்காகப் பயின்று வருகின்றது. சொற்செறிவு, பொருள் தெளிவு, இசை நயம், அணிநலம் முதலிய நல்லியல்புகள் அமைய, கருதிய பொருள்மேல் பல சொற்களைத் தொடுத்து அமைப்பதுவே செய்யுள் நடையாகும்.இந்தச் செய்யுள் நடையைத்தான் காவியத்தைப் படைப்போர் 1. Style is the man- என்ற ஆங்கிலச்சொற்றொடரோடு இதனை ஒப்பிடுக 2. செல்வகேசவராய முதலியார், தி. வசனநடை (செந்தமிழ் - 5 ஆம் தொகுதி பக்.13)