பக்கம்:பாண்டியன் பரிசு-ஒரு மதிப்பீடு.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவிய நடை 197 கையாளுகின்றனர். இந்த நடையின் தனிப்பண்பு காவியத்தைச் சிறப்புடையதாக்குகின்றது. மேனாட்டு இலக்கிய வரலாற்றைக் கவனித்தால் பற்பல காலங்களில் காவியத்தில் கையாளப்பெறும் பாநடை மாறிமாறி வந்துகொண்டிருப்பதை அறிய முடிகின்றது. மில்ட்டன் "துறக்க இழப்ப்ை (Paradise Lost) எழுதின பிறகு அகவல்நடைதான் (Blank verse) காவியத்திற்கு ஏற்றது என்ற கொள்கை நிலவி வந்தது. தமிழ் இலக்கிய வரலாற்றிலும் பெருங்காவியங்களை இயற்றினவர்கள் பற்பல நடைவகையைக் கையாண்டிருப்பதைக் காணலாம். கி.பி. ஏழாம் நூற்றாண்டிற்கு முன்னர் எழுந்த காவியங்கள் யாவற்றிலும் - சிலப்பதிகாரம், மணிமேகலை போன்றவை - பாக்கள் (சிறப்பாக அகவற்பா) பயின்று வந்திருந்தவையும், அதற்குப் பின்னர் எழுந்த காவியங்களில் பாவினங்கள் (தாழிசை, துறை, விருத்தம்) பயின்று வந்திருத்தலையும் காணலாம். ஆகவே "இம்மாதிரிதான் காவிய நடை அமைதல் வேண்டும்” என்ற கட்டுப்பாடு என்றும் இருந்ததில்லை, இருக்கவும் முடியாது என்பதை அறிகின்றோம். தேர்ந்தெடுக்கப்பெற்ற சொற்கள், கையாளப்பெறும் சொற்றொடர்கள், வாக்கியங்களின் அமைப்புமுறை, வாக்கியங்களின் சந்த நயம், இசையொழுங்கு - இப்பண்புகள் எழுத்தாளரின் தனித்திறமையைத் - தனிப்பட்ட ஆளுமைப் பண்பை வெளிப்படுத்தி நிற்பதை அறியலாம். இப்பண்புகள் உரைநடைக்கேயன்றிப் பாநடைக்கும் நன்கு பொருந்தும். சிலவகை இலக்கியங்களைப் படைத்துத் தனிப்பெரும் புகழையும் சிறப்பையும் அடைந்த சிலரது வரலாற்றை, வெண்பாவிற் புகழேந்தி, பரணிக்கோர் சயங்கொண்டான்; விருத்த மென்னும் ஒண்பாவில் உயர்கம்பன்; கோவை உலா அந்தாதிக்கு ஒட்டக் கூத்தன்; கண்பாய கலம்பகத்திற்கு இரட்டையர்கள்; வசைபாடக்காளமேகம்;