பக்கம்:பாண்டியன் பரிசு-ஒரு மதிப்பீடு.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 காவின் பாண்டியன் பரிசு - ஒரு மதிப்பீடு பண்பாய பகர்சத்தம் படிக்காச லாலொருவர் பகரொனாதே’ என்ற பாடலில் சிறப்பித்துள்ளமை காணலாம். யார் யார் எந்தெந்த வகை இலக்கியங்களை இயற்றுவதில் வல்லவர் என்று எடுத்துக்காட்டும் திறனாய்வுக் கவிதை" இது. பன்முறை இதைப் படித்துத் தமிழ் இலக்கியக் களஞ்சியத்தை முன்னும் பின்னும் பன்முறை நோக்கித் திறனாய்ந்த புலவரின் திறனை எண்ணி எண்ணி மகிழ்கின்றோம். தமிழ் இலக்கிய வரலாற்றைக் கூர்ந்து நோக்கினால் கவிஞர்கள் காவியத்தில் மேற்கொண்ட நடை காலத்துக்குக் காலம் மாறிக் கொண்டே வருவதை அறியலாம். இளங்கோவடிகள் "சிலப்பதிகாரத்"திலும், சாத்தனார் ‘மணிமேகலை"யிலும் அகவல் நடையைக் கையாண்டுள்ளனர். இவர்கள் இந்த நடையைக் கையாண்டதற்கு எந்த மரபைப் பின்பற்றினர் என்று சொல்வதற்கில்லை. தொல்காப்பியத்திலோ அதற்கு முன்னரோ யாரும் இதற்கு ஒரு மரபினை ஏற்படுத்திக் காட்டவில்லை. இளங்கோ, சாத்தனாரை அடுத்து “சிந்தாமணி"யை இயற்றிய திருத்தக்க தேவரும், "இராமகாதை"யை இயற்றிய கம்பநாடனும் எந்த மரபைப் பின்பற்றினர்? முன்னவர் பாவினைக் கையாண்டதற்கும் பின்னவர் பாவினங்களை (தாழிசைதுறை, விருத்தம் கையாண்டதற்கும் என்ன காரணம் கூறமுடியும்? தற்காலத்திற்கு வந்தால் கவியரசர் பாரதியார் தாம் இயற்றிய பாஞ்சாலி சபதத்"தில் யாப்பிலக்கணத்திற்குப் புறம்பான "நொண்டிச் சிந்து” போன்ற சாதாரணமான நடையைக் கையாண்டுள்ளார். இதற்குக் காரணம் கூற முடியுமா ? அவரவர் விருப்பத்தையொட்டியுமே கவிஞர்கள் தம் முறைகளை வகுத்துக் கொண்டனர் என்று கொள்வதே பொருத்தமுடையதாகும். கவிஞர்கட்குத்தனி உரிமமும் (Poetic license) உண்டு. அதில் எவரும் குறுக்கிட முடியாது. 3. தனிப்பாடல் 4. இதனைத் தொல்காப்பியர் கூறும் “விருந்து” என்ற தலைப்பில் அடக்கலாம்; இலக்கணமும் கூறலாம்.