பக்கம்:பாண்டியன் பரிசு-ஒரு மதிப்பீடு.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 சுராவின் பாண்டியன் பரிசு-ஒரு மதிப்பீடு கதிரைநாட்டுப் படைகட்கும் வேழநாட்டுப் படைகட்கும் கடும் போர் நிகழ்கின்றது. இரண்டு பக்கங்களிலும் வீரர்கள் வீழ்ந்து மடிகின்றனர். இதனை, பனைமரங்கள் இடிவீழக் கிழிந்து வீழும் பான்மைபோல் இருதிறத்தும் மறவர் வீழ்ந்தார்: என்று காட்டுவார்.இடிவீழ்ந்தால் பனைமரங்கள் சரிந்து வீழ்வதுபோல் என்ற உவமையால் மறவர்கள் மடிந்தனர் என்று விளக்குகின்றார் பாவேந்தர். எதிரியின் படைகள் அரண்மனைக்குள் எங்கும் பரவத் தொடங்கின என்ற கருத்தை, வேழவனின் படைவீரர் அரண்ம னைக்குள் விரிநீர்போய் மடைதோறும் பாய்வதைப்போல்" என்ற உழவுத்தொழில் உவமையால் அழகாக விளக்குவார். அரண்மனைக்குள் படைகள் புகுந்ததும் அன்னத்தை ஆத்தாள்கிழவி நிலவறைவின் வழியாகக் காப்பதை - கீழைவழி நிலவறையில் அன்னத் தன்னைக் கிளியேந்தல் போலேத்தி வெளியிற் சென்றாள்' என்ற உவமையால் விளக்குவார். உவமைநயத்துடன் "அன்னத்தைக் கிளியேந்தல்"என்ற தொடரின்நயஅழகுபடிப்போரை மகிழ்விக்கின்றது. செவிலியின்பணிச்சிறப்புடன்நடைபெறுவதைக்கண்டுமகிழ்கின்றோம். கதிர்நாட்டு அரசன் இறந்ததைக் குறித்துத் தன் தங்கையிடம் நீலிக்கண்ணிர் வடிக்கின்றான் வஞ்சகத்திற்கோர் எல்லை கண்ட நரிக்கண்ணன், திருநாட்டை நீஇழந்து, துணைஇழந்து, கைத்துண்டிற் சிறுமீனாய்க் கலங்கு கின்ற காட்சியினை நான்கான நேர்ந்த தேயோ!" கண்ணுக்கிணியாளின் பரிதாப நிலை தூண்டிலிற் சிக்கியுள்ள மீனின் நிலையை ஒத்துள்ளது என்று கூறும் உவமை நயம் மிக்கது. 5. இயல்-5; 2 - பக், 8 6. இயல் - 9:1- பக்.14 7. இயல்- 9:1- பக்.14 8. இயல்- 10:2. பக். 16