பக்கம்:பாண்டியன் பரிசு-ஒரு மதிப்பீடு.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நூல் முகம் எனக்கு வேண்டும் வசங்களை இசைப்பேன் கேளாய் கணபதி: மனத்திற் சலனம் இல்லாமல் மதியில் இருளே இல்லாமல் நினைக்கும் பொழுது நின்மவுன நிலைவந் திடச் செயல்வேண்டும் கனக்கும் செல்வம் நூறவயது: இவையும் தரநீ கடவாயே'. - பாரதியார் பாரதியார் நூற்றாண்டு விழா நாடெங்கும் கொண்டாடப் பெற்றது. அதன் நினைவாகப் பாரதியார் பற்றிநான்குநூல்களை எழுதி வெளியிட்டு அந்த விழாவைச்சிறிய அளவில் கொண்டாடிச்சிறப்பித்தேன்.குருவிக்குத் தகுந்த இராமேசுவரம் தானே அல்லவா? பாரதிதாசன் நூற்றாண்டு விழாவில் அதனைச் சிறப்பிக்கும் வழியில் மூன்று நூல்கள் எழுதினேன். அவற்றில் பாவேந்தர்பாரதிதாசன்-ஒருகண்ணோட்டம் என்ற ஒன்றுதான் வெளிவந்தது (1991). ஏனைய இரண்டையும் ஒரு வெளியீட்டாளர் ஆறு ஆண்டுகள் வைத்திருந்துவிட்டு இயலாமையை வருத்தத்துடன் தெரிவித்து கைப்படிகளைத் திருப்பித்தந்துவிட்டார். அடியேன் ஒரு வைணவ மாநாட்டில் கலந்து கொண்டு திரும்பும்போது எம்பெருமான் ஏழுமலையான் திருவருளால் திரு. வீ.வீ.கே. சுப்புராசு அவர்களின் (சுரா வெளியீடுகள்)நட்புக் கிடைத்தது. இறகு முளைக்காமல் கிடந்த இந்த இரண்டு நூல்களையும் வெளியிட மனமுவந்து ஒப்புக் கொண்டார். வெளியிடப் பெறாதிருந்த பாண்டியன் பரிசு - ஒரு மதிப்பீடு' ’பாவேந்தர் பாட்டுத்திறன்’ என்ற இரண்டின் படிகளையும் பெற்று அடைகாத்தார். இரண்டும் இறகு முளைத்து ஒன்றன் பின் ஒன்றாக வெளிவருகின்றன. வெளியிட்ட இப்பெருமகனாருக்கு என் மனங்கனிந்த நன்றி. 1. பா.க தோ.பா. விநாயகர் நான்மணி மாலை - செய், 7. -xi -