பக்கம்:பாண்டியன் பரிசு-ஒரு மதிப்பீடு.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவிய நடை V itt தூண்டிலிலுள்ள மீனை தூண்டிலான சிறிது நேரத்தில் கொன்று சட்டியில் போடுவதைப்போல் இவளும் சிறிது நேரத்தில் நரியின் வாளுக்குப் பலியாகப் போகின்றாள் என்பதை முற்கூறுவது போலும் அமைகின்றது. வீரப்பனின் தீச்செயல்களை விரும்பாத ஆத்தாள் அவர்கள் வாழ்ந்த நல்லூரை விட்டு தன் மகனுடன் புல்லூர் சென்று அங்குத் தனிக்குடிசை அமைத்துக் கொண்டு வாழ்வதை, தேனடையும் ஈயும்போல் மகனும் தானும் வறுமையிலும் செம்மையினைக் காண்பாராகி” என்று காட்டுவார். தேன்கூடு அமைத்துத் தேனெடுப்பார் அக்கூட்டில் ஈ அடையில் ஒட்டிக் கொண்டிருப்பதை அறிவார்கள். அப்படி வேலன் அன்னையிடம் ஒட்டிக்கொண்டு வாழ்ந்தான் என்கின்றார். கதிரை நாட்டைக் கைப்பற்றிக் கொண்டபிறகு வேழநாட்டுப் படைவீரர்கள் அரண்மனைக்குள் புகுந்து கொள்ளையடிப்பதைக் கவிஞர் விரப்பன் வாய்மொழியாக, இடுகாட்டில் நரிக்கூட்டம் உலாவல் போலே எவ்விடத்தும் அரண்மனையில் வேழ நாட்டின் படைவீரர் உலாவினார்: எலிகள் ஓடிப் பண்டங்கள் உருட்டுதல்போல் பொருளை யெல்லாம் தடதடென உருட்டினார்" இவ்வாறு விளக்குவார். படைமறவர் தந்திரமாக உலாவுவது நரிக்கூட்டம் உலாவுவதனுடனும், அவர்கள் பொருள்களைக் கொள்ளையடிப்பது எலிக் கூட்டத்தின் செயல்களுடனும் ஒப்பிட்டுக் காட்டுவது பொருத்தமான உவமைகளாகும். வயது முதிர்ந்து உடல் தளர்ந்த நிலையிலிருந்த முதுகுவளைந்த திருமேனியையுடைய வீரப்பன் தோழர்களுடன் பாண்டியன் பரிசு பற்றியும் வேறு பல செய்திகளையும் பேசிக்கொண்டிருந்தவன் அதனை யார்க்கும் தோன்றாத இடத்தில் புதைப்பதற்காகப் புல்லூர் போய்வருவதாக சொல்லிச் சென்றதைக் கவிஞர், 9. இயல்- 16:4- பக்.29 10. இயல்- 16:7-பக். 30