பக்கம்:பாண்டியன் பரிசு-ஒரு மதிப்பீடு.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 கராவின் பாண்டியன் பரிசு-ஒரு மதிப்பீடு வாங்கியதோர் வில்லைப்போல் வளைத்த மேனி வானுயர்ந்த குன்றுபோல் நிமிர்ந்து நின்றான்; ஓங்கியதோள் மீதினிலே பேழை தன்னை 'உம்'என்று துக்கினான்; உடன்ந டந்தான்" என்று கூறுவதில் அமைந்துள்ள உவமை நயம் நம்மைக் கவர்வதாக உள்ளது. சீனி என்னும் கணக்காயன் வேலன் முதலியோருக்கு நாட்டின் உண்மை நிலை செப்பினவர். அவர் வேலனை நோக்கி 'உன் ஆத்தாளைக் காப்பதற்கு உடனே போ ! இந்தா வாள், குதிரை தந்தேன்!” என்று ஆணையிட வேலன் புல்லுரே அதிரும்படியாகக் குதிரை மேலேறிப் புறப்படுகின்றான். அப்போது வீரன் ஒருவன் கணக்காயனை நோக்கி நாலைந்து பேர்களை வேலனுக்குத் துணையாக அனுப்புமாறு வேண்டுகின்றான். ஆகுதியில் நெய் வார்க்க வார்க்க மூண்டெழும் நெருப்பைப்போல பகைமேற்சென்று கணக்காயனின் புகழ் வளர்ப்பதாகக் கூறுகின்றான். இதனைக் கவிஞர் நெய்யாலே மூண்டெழுந்த நெருப்பைப் போல நெஞ்சாலே கொள்கின்ற விசையி னோடு வையாலே ஆனதொரு பகைமேற் செல்வோம்; வாளாலே தங்கள் புகழ் வளர்ப்போம்" என்ற பாடற்பகுதியால் விளக்குவார். அன்னத்தின் பெற்றோர் நரிக்கண்ணனால் வஞ்சகமாகக் கொல்லப்படுகின்றனர். இளவரசி அன்னம் ஆத்தாள் கிழவியுடன் புல்லூரிலுள்ள தனிக்குடிசையொன்றில் பதுங்கி வாழ்கின்றாள். அவளது இரங்கத்தக்க நிலையைக் கவிஞர் பெருமான், புல்லுரில் சிறுகுடிசை தனில்இரண்டு புண்பட்ட நெஞ்சங்கள் ஒன்றை யொன்று நல்லுரையில் தேற்றி யிருந்தன, அவற்றில் நரைய்ட்ட ஆத்தாளின் நெஞ்சம் ஒன்று; 11. இயல்- 17:7 - பக். 33 12. இயல் - 19:2-,பக். 36