பக்கம்:பாண்டியன் பரிசு-ஒரு மதிப்பீடு.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவிய நடை 13 வல்லுறு குறிவைத்த புதாப்போல் வாழும் மலர்க்கொடியாள் அன்னத்தின் உள்ளம் ஒன்று' என்று குறிப்பிடுகின்றார். அன்னத்தை "வல்லூறு குறிவைத்த புறாவோடு ஒப்பிட்டுக் காட்டுவது அற்புதமான உவமை பெற்றோர் தம் மக்கள்மீது கொண்டிருக்கும் இன்பக் கனவு வெவ்வேறு விதமாக அமையும் மகன்மீது கொண்டிருக்கும் கனவு ஒரு விதமாக இருந்தபோதிலும் மகள்மீது கொண்டிருக்கும் கனவு சற்று வேறுபாடாகவே இருக்கும். தாயின் நினைப்பு தன் அருமை மகள் இன்பத்துறையில் புகப்போவதை அசைபோட்டு மகிழும். இதனை நடைமுறையில் பல தாய்மார்களிடம் காணலாம். ஆனால், இவர்களில் எவரும் தன் மகள் கள்ளக் காதலனுடன் உறவு கொள்வதை விரும்பார்கள்; தன் மகள் ஒத்த குணநலன்களையுடைய காதலனை மணந்து இன்பம் துய்க்கவேண்டும் என்றேவிரும்புவார்கள்.இக்காட்சி - அன்னத்தைப் பற்றிய கனவு- ஆத்தாள் கிழவியின் அன்பு மனத்தில் படர்கின்றது. அன்னமும் அவளுடைய அன்புக் கணவனும் ஆணிப் பொன் கட்டிலிலே இன்பத்தில் தம்மை மறந்த நிலையில் ஆழ்ந்து கிடக்கும் கற்பனைக் காட்சியைக் காண்கின்றாள். சேற்றிலே எருமை தன்னை மறந்து, சூழ்நிலையை மறந்து இன்பக் களிப்பில் சொக்கிப்போவது போன்ற நிலையைக் காண்கின்றாள்! இதனை ஆத்தாளின் வாக்காகவே கவிஞர், அருமைமகள் தனக்கேற்ற அன்பனோடும் ஆணிப்பொன் கட்டிலெனும் சேற்றினுள்ளே எருமைளனக் கிடந்தின்பம் துகரு கின்ற எழில்நாளை நான்காணப் பெற்றேனோ" என்று உவமை அமைத்து அற்புதமாக வெளியிடுகின்றார். இலக்கண மரபைக் கருத்தில்கொண்டு இதனைத் தள்ளி விடுவதற்கில்லை. எருமைப்பாலைப் பல்வேறு விதங்களில் அநுபவித்து மகிழ்ந்தாலும் அதன் உருவத்தை நாம் மகிழ்வதில்லை. ஆனால், சேற்றில் படுத்து அசைவற்றுக் கிடப்பதால் பெறும் இன்பம் எவ்விதத்திலும் குறைந்ததன்று. 13. இயல் - 20:1- பக். 38 14. இயல்- 20: 3 - பக். 39