பக்கம்:பாண்டியன் பரிசு-ஒரு மதிப்பீடு.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 காவின் பாண்டியன் பரிசு-ஒரு மதிப்பீடு இன்னோர் உவமையும் தாழ்ந்ததுபோல் தோன்றும். உண்மை அதுவன்று.பன்றிக்குட்டிகள் தாய்ப்பால் அருந்துவது ஒற்றுமைக்கு ஒர் எடுத்துக்காட்டு. எல்லாக்குட்டிகளும் ஒன்றுகூடி சண்டை சச்சரவின்றி தாயிடம் பாலருந்தி உல்லாசமாக உலவும். பன்றிக்குட்டிகளுக்குப் பாலருந்திய திருவிளையாடல் மதுரை சோமசுந்தரப் பெருமானின் திருவிளையாடல்களில் ஒன்று என்பதை இப்போது நினைவுகூர முடிகின்றது. மக்களும் பன்றிக்குட்டிகளைப் போல் நிறையன்பால் ஒற்றுமையாக வாழலாம் என்பதைக் கவிஞர் உலக ஒற்றுமையின் சித்திரமாக உவமித்துக் காட்டுவார். சுரத்தபால் இருத்தருந்திப் பரந்து லாவும் தெடும்பன்றிக் குட்டிகள்போல் மக்கள் யாரும் நிறையன்பால் உடன்பிறந்தார் என்று ணர்த்தக் கிடந்துதவம் புரிகின்ற உலகில்" உவமையில் சிறந்தபொருள் இருப்பினும் சொல்லின் பொருள் ஏற்றமுடையதா என்பதைச் சிந்திக்கவேண்டும். நாய், பூனை, பன்றி முதலிய பிராணிகள் பல குட்டிகளை ஈன்றெடுக்கின்றன. நாய்க் குட்டிகளும் பூனைக்குட்டிகளும் தம் தாயிடம் பாலருந்தும்போது தம்முள் ஒன்றையொன்று கலகம் விளைவித்துக்கொண்டு ஒன்றையொன்று முட்டிமோதித்தள்ளிக்கொள்வதையும், பன்றிக்குட்டிகள் அவ்வாறின்றி நிறையன்பால் ஒற்றுமையாகப் பாலுண்ணுவதையும் காணலாம். பன்றிக்குட்டிகளின் ஒற்றுமையை வியந்த கவிஞர் அன்னத்தின் வாய்மொழியாக இவ்வாறு கூறுவார். புறத்தோற்றத்தில் பன்றி இழிந்தது என்று கருதப்பெறினும், அகத்திலிருக்கும் அதன் அக ஒற்றுமைப் பண்பு மானிடர்க்கு எடுத்துக்காட்டாக அமையும் சிறப்பைப் பெற்றுத் திகழ்கின்றது. வேழநாட்டு வேந்தனும் கதிரைநாட்டுக் காவலனும் எதிரெதிரே நின்று இரண்டு தழற்பந்துகள் சுழல்வதைப் போல வாட்போருக்கு இலக்கியத்தை நல்கும் பாணியில் போர் புரிந்தனர் என்கின்றார்." நரிக்கண்ணனுக்கு முடிசூட்டும் செய்தியை முரசறையும் ஒலிகேட்டு 15. இயல் - 22:2- பக். 42 16. இயல் - 5: 4- பக்.9