பக்கம்:பாண்டியன் பரிசு-ஒரு மதிப்பீடு.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவிய நடை 15 ஆத்தாள் கிழவி அவனைத் தூற்றுகின்ற சமயம் அன்னமும் ஆத்தாளும் தங்கியிருந்த குடிசையை நரிக்கண்ணனின் ஆட்கள் சூழ்கின்றனர். அப்பொழுது மறத்தன்மை மிக்க வேலன் இளம் ஏறுபோல் அவர்களை எதிர்த்துப் போர் புரிவதை, பலகுதிரை மறவரின்மேல் வேலன் எட்டிப் பாய்ந்தனன்டல் ஆட்கட்குள் வேங்கை போலே! கலங்கினர்வே ழவன்பத்துப் பேர்மாண் டார்கள்!" என்ற உவமையால் விளக்குவார்; நரிக்கண்ணனால் விடுக்கப்பெற்ற பூதத்தைக் கண்டுவெருவியோடும் மனிதர்கள் வேகமாக ஒடுவதையும், நாற்புறமும் பயமுறுத்தும் பூதம் தொடர்வதாகப் பிரமை கொண்டு அவர்கள் திரிவதையும், எங்கு போவது என்று தெரியாமல் "அங்கே பூதம், இங்கே பூதம்” என்று சொல்லிக்கொண்டு கவலை எருதுகள் போல் நகர்சுற்றிப் புறப்பட்ட இடத்திற்கே மீண்டும் வருவதையும், கவண்ஓடும் கல்லைப்போல் விரைந்தாரேனும் எவ்விடத்தில் போவதென்றும் கருத வில்லை கவலைளருதுகள்போல் மக்கள் யாரும் கால்கடுக்க தகர்கற்றிச்சுற்றி வந்தார்" என்று நகைச்சுவை தோன்ற விளக்குவார். வீரப்பனும் ஆத்தாள் கிழவியும் ஒருவரையொருவர் தெரியாமல் வெட்டிக்கொண்டு கீழே கிடந்து "சுரப்பற்ற பசுங்காம்பைப்போல் எந்நினைவும் இல்லாமல் புரள்கின்றனர். இந்தக் காட்சியைக் கவிஞர், தனக்குத்தன் கணவனுக்கும் இடையில் வாய்த்த தடை, பிரிவு கசப்பனைத்தும் பல்லாண் டாகப் புனத்திலுனும் புதல்போலே வளர்த்ததாலே புறத்தொடர்பே இல்லாத முதிய ஆத்தா அனற்கொள்ளி பட்டபிள்ளை கதறும் போதில் அம்மான்என் பதுபோலே துணைவன் தன்னை, நினைத்தவளாய்த் தாழ்.குரலில் "அத்தான்” என்றாள் நிறைவியப்பால் வீரப்பன்"ஆத்தா” என்றான்' 17. இயல் - 24:2- பக். 46 18. இயல்- 49:5- பக், 88 19. இயல் - 37:3- பக். 62